பால் கேரட் கீர்

Loading...

பால் கேரட் கீர்பால் – 1 லிட்டர்
கேரட் – 3
முந்திரி – 6
பாதாம் – 6
சர்க்கரை – முக்கால் கப்
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை.


செய்முறை:

கேரட்டை தோல் சிவி, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். அதனுடன் பாதாம், முந்திரி சேர்த்து, ஒரு கப் தண்ணீரும் சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் விட்டு இறக்குங்கள். ஆறியவுடன் திறந்து, பாதாமை எடுத்து, தோலை நீக்கிக் கொள்ளுங்கள். பிறகு, பாதாம், முந்திரி, கேரட், மூன்றையும் விழுதாக அரைத்தெடுங்கள். அரைத்த விழுதை, வேகவைத்த தண்ணீரிலேயே கலந்து வையுங்கள்.

பாலைப் பாதியாக வற்றும் வரை கொதிக்கவிட்டு, கலந்து வைத்திருக்கும் விழுதை அதனுடன் சேருங்கள். பிறகு, சர்க்கரையையும் சேர்த்து, மேலும் பத்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். கொதித்ததும் இறக்கி ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் சேர்த்து கலந்து, ஆறவிட்டு குளிரவைத்து “ஜில்” லெனப் பரிமாறுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply