பலாமுசு குருமா

Loading...

பலாமுசு குருமா
தேவையான பொருள்கள்

சிறிய பலாக்காய் – 1
தேங்காய் – அரை மூடி
முந்திரிப் பருப்பு – 10 தேவைப்பட்டால்
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
கசகசா – 2 ஸ்பூன்
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு – பேஸ்ட்
தக்காளி – 2
ஏலக்காய், கிராம்பு – 1 ஸ்பூன்
பட்டை – கொஞ்சம்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மல்லி தூள் – 2 ஸ்பூன்
மிளகாய்தூள் – 2 ஸ்பூன்
கரம்மசாலா தூள் – அரை ஸ்பூன்

செய்முறை:-

தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள்.
தக்காளியையும், வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும்
கையில் எண்ணெயை தடவி கொண்டு பலாக்காயின் தோலைச் சீவி, பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
அதில் மஞ்சள் தூளும், உப்பும் சேர்த்து, அரை வேக்கடாக வேக வைத்துக் கொண்டு, தண்ணீரை வடிகட்டி விடுங்கள்.
கடாயில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் பச்சை மிளகாய், சீரகம், சோம்பு, கசகசா, முந்திரி பருப்பு ஆகிய பொருள்களைப் போட்டு வதக்குங்கள்.
அத்துடன் தேங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கி, ஆற வைத்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, சோம்பு போட்டுத் தாளித்துக் கொண்டு, தக்காளி, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லி தூள், மிளகாய்தூள், கரம் மசாலா போட்டு நன்கு வதக்கி அதனுடன் வேக வைத்திருக்கும் பலாக்காய், அரைத்த மசாலாவைச் சேர்த்துக் கிளறி .
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்புப் போட்டுக் கொதிக்க வைக்கவும்.
குருமா திக்கானதும் இறக்கி பரிமாறவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply