பனீர் டோஸ்ட்

Loading...

பனீர் டோஸ்ட்
தேவையானவை:

கோதுமை பிரெட் – 6 துண்டுகள்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
(கொத்தமல்லி – 1 கட்டு
புதினா – 1/2 கட்டு
எலுமிச்சைச்சாறு – 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு
இவற்றை ஒன்றாக அரைத்த) பச்சைச் சட்னி – 1 டேபிள்ஸ்பூன்


பூரணத்துக்கு:

துருவிய சோயா பனீர் – 1/2 கப்
துருவிய கேரட் – 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 டேபிள்ஸ்பூன்
சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்


செய்முறை:

பூரணத்துக்கு கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் ஒன்றாக கலந்து கொள்ளவும். பிரெட்டின் ஒருபுறம் லேசாக எண்ணெய் தொட்டு தடவவும். மறுபுறம் பூரணத்தை பரத்தவும். மற்றொரு பிரட் துண்டில் ஒருபுறம் எண்ணெய் தடவி, மறுபுறம் சிறிதளவு பச்சை சட்னியை பரப்பிக் கொள்ளவும். இரண்டு பிரெட் துண்டுகளின் சட்னி, பூரணம் பக்கம் உள்பக்கம் வருவதுபோல சேர்த்து, சுற்றிலும் அழுத்திவிடவும். தோசைக்கல் காய்ந்ததும் அதில் போட்டு, மிதமான தீயில் இருபுறமும் திருப்பி வேகவைத்து எடுத்து, சூடாக பரிமாறவும்.


(குறிப்பு:
கோதுமை பிரெட்டில் நார்ச்சத்து அதிக அளவு இருக்கிறது. எண்ணெய் உணவு ஒப்புக் கொள்ளாதவர்களுக்கு இந்த அயிட்டம் நல்ல சாய்ஸ்!)

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply