படுக்கும் முன் இரவில் எண்ணெய் தேய்த்தால் முடி உதிராது | Tamil Serial Today Org

படுக்கும் முன் இரவில் எண்ணெய் தேய்த்தால் முடி உதிராது

Loading...

படுக்கும் முன் இரவில் எண்ணெய் தேய்த்தால் முடி உதிராதுதினமும் படுக்கும் முன் இரவில் எண்ணெய் தேய்த்தால் முடி உதிராது
தினமும் படுக்கும் முன் 5 -10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். அதுவும் சீவும்போது, கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும்.
படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் போல் செய்யவேண்டும். இவ்வாறு மூன்று வாரம் தொடர்ந்து செய்தால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.

மேலும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும் இரவில் எண்ணெய் தேய்த்து மறுநாள் எண்ணெய் தலையுடன் வெளியே செல்ல முடியாது.
ஆகவே அப்போது இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டு மறுநாள் ஷாம்பு போட்டு குளித்துவிடலாம்.

அதனால் கூந்தலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு வளரும். ஏனெனில் கூந்தலில் எப்போதும் ஈரப்பசையானது இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், கூந்தலை வளர்ச்சியடையும்.
கூந்தலானது நன்கு வளர வேண்டுமென்றால், படுக்கும் முன் கூந்தலை நன்கு சீவி கட்டிக் கொண்டு படுக்க வேண்டும். அதனால் கூந்தலானது அதிகம் உடையாது மற்றும் உதிரவும் செய்யாது.
நீண்ட கூந்தலை உடையவர்கள் கூந்தலின் முனையை மடித்து கட்டி கொண்டு படுக்கலாம். அவ்வாறு செய்வதால் கூந்தலின் முனைகள் சிக்கு அடையாமல், முடிச்சுகள் எதுவும் வராமல் இருக்கும்.
மேலும் கூந்தலின் முனைகள் வெடிக்காமலும் இருக்கும். ஏற்கனவே வெடிப்புகள் இருந்தால், இனிமேல் வெடிப்புகள் வராமல் தடுக்கும்.

Loading...
Rates : 0
VTST BN