நோக்கியாவின் 3310 ற்கு 15 ஆவது பிறந்தநாள்

Loading...

நோக்கியாவின் 3310 ற்கு 15 ஆவது பிறந்தநாள்செங்கல் எனச் செல்லமாக அழைக்கப்படும் இந்த நோக்கியா 3310 மொபைல் போனின் 15-வது பிறந்தநாளை இணையதளமே கடந்த செப்டம்பர் 2-ம் தேதி களிப்புடன் கொண்டாடியது. உலகம் முழுவதும் சுமார் 12 கோடியே 60 லட்சம் போன்களை கடந்த 2011-ம் ஆண்டு வரை விற்றுத்தீர்த்திருந்தது நோக்கியா.

ஆப்பிள் ஐபோன் 6S-க்காக தற்போது ஆவலோடு காத்திருக்கும் பலரும் இந்த நோக்கியாவின் புகழ் பாடாமல் இல்லை. நோக்கியா 3310 போனை பலரும், உடையாத போன், நீண்ட நேர பேட்டரியுடன் நீடித்து உழைக்கும் போன் என நினைவு கூர்ந்தாலும், அதில் 459 எழுத்துக்களுடன், மெசேஜ் செய்ய முடியும், அதிலிருந்த ‘ஸ்நேக் II’ விளையாட்டு அனைவரையும் கிட்டத்தட்ட அடிமையாக்கி வைத்திருந்த இந்தச் சிறப்பம்சங்களும் இருந்தது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply