நீங்கள் ஐந்து வருடங்களுக்குள் இறந்து விடுவீர்களா

Loading...

நீங்கள் ஐந்து வருடங்களுக்குள் இறந்து விடுவீர்களாநீங்கள் ஐந்து வருடங்களுக்குள் இறந்து விடுவீர்களா என்பதை ஆன்லைனில் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இதற்காக சுவீடன் விஞ்ஞானிகள் உருவாக்கிய வலைதளத்தில் ஆண்களுக்கு 11 கேள்விகளும், பெண்களுக்கு 13 கேள்விகளும் கேட்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால் நீங்கள் 5 வருடங்களில் இறப்பதற்கான வாய்ப்புகள் தெளிவாக தெரிந்துவிடும். புகை பிடிக்கும் பழக்கம், உடல்நலக்கோளாறு குறித்த வரலாறு, நீங்கள் நடக்கும் வேகம், நீங்கள் எத்தனை கார்களை வைத்துள்ளீர்கள் போன்ற கேள்விகள் அதில் இடம் பெற்றுள்ளன.

எனினும் இதில் கலந்து கொள்ள உங்களுக்கு 40 வயது நிரம்பியிருக்கவேண்டும். ஸ்காட்லாந்து நாட்டில் இரு மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்ட 35 ஆயிரம் நோயாளிகளிடம் இந்த வலைதள விஞ்ஞானிகள் முதலில் சோதனை நடத்தினர். அதில் கிடைத்த முடிவுகள் 80 சதவீதம் மருத்துவர்களின் கணிப்புகளுடன் துல்லியமாக பொருந்தின. இந்த வலைதளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை கூடங்களுக்கு செல்லாமலேயே தங்கள் வாழ்க்கையில் ஏற்பட உள்ள அபாயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் உறுதிபட கூறியுள்ளனர்.

ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஐரோப்பிய யூனியன் மக்களுக்கு ஏற்ற வகையில் இந்த வலைதளத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஏனென்றால் இதில் மது குடிப்பது பற்றிய கேள்விகளே இல்லை. நம் நாட்டில், மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அது பற்றிய கேள்விகள் இல்லாமல் இறப்பது குறித்த ஆபத்தை எப்படி தெரிந்து கொள்ள முடியும் என்ற சந்தேகம் எழுகிறது.

இருந்தபோதிலும் நீங்கள் இறப்பது குறித்த ஆபத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்று விருப்பப்பட்டீர்கள் என்றால் www.ubble.co.uk என்று இந்த இணையதளத்துக்குள் சென்று பாருங்கள்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply