நல்லெண்ணெய் தலைமுடிக்கு நன்மையா

Loading...

நல்லெண்ணெய் தலைமுடிக்கு நன்மையாதலைமுடிக்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் பெறும் நன்மைகள்!
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ, பி காம்ப்ளக்ஸ் மற்றும் கனிமச்சத்துக்களுள் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் புரோட்டீன் போன்றவைகளும் உள்ளன. எனவே இந்த எண்ணெயைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், முடி நன்கு வலிமையுடனும், உறுதியாகவும் இருக்கும்.
தலைமுடி வளர்ச்சியைத் தூண்டும் நல்லெண்ணெயைக் கொண்டு வாரம் ஒருமுறை மசாஜ் செய்து வந்தால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் வளர்ச்சி மேம்படும். வேண்டுமானால் இந்த எண்ணெயை தேங்காய் எண்ணெய் போன்று தினமும் பயன்படுத்தலாம்.
நரைமுடி பிரச்சனை இருப்பவர்கள், நல்லெண்ணெயை தினமும் பயன்படுத்தி வர தலைமுடிக்கு கருமையை வழங்கி, நரைமுடியைத் தடுக்கும்.
பொடுகு தலையில் அதிகம் இருந்தால், இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய பொடுகு நீங்கும். அதற்கு நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர பொடுகு பிரச்சனை நீங்கியிருப்பதைக் காணலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply