தொலைந்துபோன கைப்பேசியை கண்டுபிடிப்பது எப்படி

Loading...

தொலைந்துபோன கைப்பேசியை கண்டுபிடிப்பது எப்படிஅதிலும் குறிப்பாக விலையுயர்ந்த கைத் தொலைபேசி என்றால் அது உளைச்சலை மேலும் அதிகப்படுத்தும்.தொலைந்துபோனப் பொருட்களை தேடிக் கண்டுபிடிப்பது என்பது சலிப்பையும், அயர்ச்சியையும் ஏற்படுத்தும் ஒரு செயல். சரி, தொலைந்துபோன தொலைபேசியை சுலபமாக கண்டுபிடிக்க முடியுமென்றால் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே. அவ்வகையில் காணாமல்போன கைப்பேசிகளைக் கண்டுபிடிக்க உதவும் சில வழிமுறைகளை பிபிசி கிளிக் ஆராய்கிறது.


ஆண்ட்ராய்ட் தொலைபேசிகள் :-

கடந்த ஏப்ரல் மாதம் ‘Find my phone’ அதாவது எனது தொலைபேசியை கண்டுபிடியுங்கள் என்று தட்டச்சு செய்து கண்டறியும் புதிய வழியை கூகிள் அறிமுகப்படுத்தியது.கூகிள் இயங்குதளமான ஆண்ட்ராய்ட் மூலம் செயல்படும் செயலியுடன் உங்கள் தொலைபேசி தொடர்புபடுத்தப்பட்டிருக்க வேண்டும். அதை நீங்கள் உங்கள் தொலைபேசியில் தரவிறக்கம் செய்யாவிட்டாலும் அல்லது அதை செயல்படுத்தாவிட்டாலும் கூட அது உதவும்.

இதன் மூலம் உங்கள் கைத் தொலைபேசி எங்குள்ளது என்பதை அறிந்து கொள்வது மட்டுமன்றி, அதை முழு அளவில் அலற வைக்கவும் முடியும். நீங்கள் அமர்ந்திருந்த சோஃபாவின் இடுக்கில் தொலைபேசி மறைந்திருந்தாலும் கண்டுபிடித்துவிடலாம். அதுமட்டுமல்ல கூகிள் இணையதளத்திலுள்ள டிவைஸ் மானேஜர் பக்கத்துக்கும் சென்று காணாமல்போன தொலைபேசியைக் கண்டுபிடிக்க மட்டுமல்ல அதை முடக்கவும் முடியும்.


ஆப்பிள் தொலைபேசிகள் :-

ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளை எப்படித் தேடிக் கண்டுபிடிக்கலாமோ அதேபோல் ஆப்பிள் கைத் தொலைபேசிகளையும் ஐ க்ளவுடுக்குள் லாகின் செய்து அதை கண்டுபிடிக்க முடியும். அப்படி லாகின் செய்யும்போது காணாமல் போன தொலைபேசியை கண்டுபிடிக்கவெனவுள்ள செயலியின் மூலம் கண்டுபிடிக்கலாம். ஆனால் உங்களது ஆப்பிள் உபகரணத்திலுள்ள ஐ கிளவுடில் லாகின் செய்திருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.


விண்டோஸ் :-

மற்ற இரண்டும் போலத்தான் விண்டோஸ் தொலைபேசியைக் கண்டுபிடிக்கும் முறையும். இதிலும் லாகின் செய்திருக்க வேண்டியது அவசியம். ஆனால் எல்லாவற்றுக்கும் முக்கியமானது, தொலைந்துபோன தொலைபேசி ஆன் செய்யப்பட்டு இணையத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். எனவே தொலைபேசி காணாமல் போய் அதிலிருந்து மின்கலமும் சக்தி இழந்து போனால், அதைத் தேடிக் கண்டுபிடிப்பது கடினம்.

ஆனால் ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளைப் பொறுத்தவரை பாட்டரி முற்றாக தீர்ந்து போனாலும், அதைக் கண்டுபிடிக்கலாம். “signal flare” எனும் தொழில்நுட்பத்தின் மூலம் அது சாத்தியமாகும். அந்தத் தொழில்நுட்பமானது காணாமல் போன தொலைபேசி கடைசியாக எப்போது இணையத்துடன் தொடர்பில் இருந்தபோது எங்கிருந்தது என்பதை குறித்துக் கொள்ளும். ஆகவே அதை வைத்து ஓரளவுக்கு அது எங்கிருந்தது என்பதை கணிக்க முடியும்.

எனவே கைத்தொலைபேசி தொலைந்துவிடும் என்று நீங்கள் கவலை கொண்டால், அதிலுள்ள சிறப்பம்சம் ஒன்றை இயக்கினால், அது சந்தேகத்துக்குரிய வகையில் உங்கள் தொலைபேசியை யாராவது கேடு ஏற்படுத்த முயற்சித்தால் அதை படம் எடுத்து உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிடும். அதோடு தொலைபேசி எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். இது காவல்துறையினரிடம் தகவல்களை அளிக்க ஏதுவாக இருக்கும்.


டிஜிட்டல் காமிரா :-

தொலைபேசிகளை இப்படி கண்டுபிடிக்கலாம் என்றால், டிஜிட்டல் காமிராக்களை எப்படி கண்டுபிடிப்பது? அதற்கும் வழியுள்ளது. அந்த காமிரா மூலம் எடுக்கப்பட்ட படத்தை ஆராய்வதன் மூலம், அதற்குள் மறைந்திருக்கும் தகவல்கள் மூலம் காணாமால் போன காமிரா எங்குள்ளது என்பதை கண்டறிய முடியும்.

இதற்கு எக்சிஃப் டேட்டா(exif data) என்று பெயர். அந்தக் காமிரா மூலம் எடுக்கப்பட்ட படத்தை stolencamerafinder.com இணையத்திலுள்ள தேடு மென்பொருளில் இழுத்துவிட்டால், அது இணையதளத்தில் தேடி அந்தக் புகைப்படத்தில் மறைந்திருக்கும் தரவை அந்தக் காமராவின் சீரியல் எண் தரவுகளுடன் தொடர்புபடுத்தி இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்கும்.

ஆனால் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு காவல்துறையினர் விடுக்கும் எச்சரிக்கை என்பது, நீங்களாகவே திருடர்களை எதிர்கொள்ள முயற்சிக்க வேண்டாம் என்பதே. இருக்கும் தகவல்களை அவர்களிடம் அளித்துவிட்டு காத்திருப்பது மட்டுமே பொருளைத் தொலைத்தவர் செய்ய வேண்டியதெல்லாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply