தேங்காய் பால் ஸ்வீட் கீர்

Loading...

தேங்காய் பால் ஸ்வீட் கீர்

தேவையான பொருட்கள்:

தேங்காய் பால் – 1 கப் முதல் 2 கப்
சர்க்கரை – 1/2 கப்
தேங்காய் துருவல் – 1/2 கப்
பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு – 2 டீ ஸ்பூன்
திராட்சை பழம் – 1/2 கப்
குங்குமப்பூ – 1 சிட்டிகை
சோள மாவு – 2 ஸ்பூன்செய்முறை:

தேங்காய் பாலின் முதல் பாலை தனியாக எடுத்து வைக்கவும். இரண்டாவது பாலை அடுப்பில் 2 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு சோளமாவை கரைத்து விட்டு, சர்க்கரை போடவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி தேங்காய் துருவல், பாதாம், முந்திரி, திராட்சை பழங்களை போட்டு கலந்து பிரிட்ஜில் வைக்கவும். தேவையான போது, ஜில்லென்று பரிமாறவும். மிகவும் சுவையான, வெயிலுக்கேற்ற பானம் இது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply