தேங்காய் இனிப்பு

Loading...

தேங்காய் இனிப்பு
தேவையான பொருட்கள்:-

அரிசி – 250 கிராம்
வெல்லம் – 200 கிராம்
தேங்காய் துருவல் – 1 கப்
ஏலக்காய்த்தூள் சிறிதளவு
எண்ணை – தேவையான அளவு


செய்முறை:-

அரிசியை முதல் நாள் இரவே ஊறவைத்து அடுத்த நாள் அரைக்க வேண்டும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அளவான தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். வெல்லத்தண்ணீர் கொதித்ததும் தூசு, மண் போக வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி தேங்காய் துருவலைக் கொட்டி கிளற வேண்டும்.

பிறகு கீழே இறக்கி ஏலக்காய் தூள், அரிசிமாவு சேர்த்து நன்கு கிளற வேண்டும். சிறிது ஆறியதும் உருண்டைகளாக பிடித்து காய்ந்த எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும். இதுவே தேங்காய் இனிப்பு ஆகும். இதை ஒரு வாரம் வரையில் வைத்து கூட உபயோகிக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply