தினமும் 2 டம்ளர் ரெட் ஒயின் உடல் பருமனை குறைக்கவும் இதயநோய் பாதிப்பை தடுக்கவும்‍‍‍‍‍‍‍

Loading...

தினமும் 2 டம்ளர் ரெட் ஒயின் உடல் பருமனை குறைக்கவும் இதயநோய் பாதிப்பை தடுக்கவும்‍‍‍‍‍‍‍ஒயின் திரவம் போதைப்பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த காலத்தில் தினசரி இரண்டு டம்ளர் ஒயின் குடித்தால் இதயநோய் பாதிப்பு ஏற்படுவது 40 சதவிகிதம் குறைகிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்தது. இந்த ஆய்வு ஒயின் காதலர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது.

அதேபோல் தினசரி மது குடிப்பவர்களுக்கு மார்பகப்புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்று கூறும் மருத்துவர்கள் தினசரி சிவப்பு ஒயின் குடித்தால் மார்பகப்புற்றுநோய் வரும் வாய்ப்பு பாதியளவாக குறைகிறது என்று லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவ இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சிவப்பு ஒயின் குடிப்பதால் உடல் பருமன் குறையும் வாய்ப்புள்ளது என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இன்டியானாவில் உள்ள பர்டியூ பல்கலை ஆய்வாளர்கள் புதிய கண்டு பிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். அதாவது ரெட் ஒயினில் அடங்கியுள்ள ஒரு வேதிப்பொருளுக்கு உடல் பருமனைத் தடுக்கும் சக்தி உள்ளதாம்! ரெட் ஒயினில் உள்ள piceatannol என்ற அந்த வேதிப்பொருள் இளம் கொழுப்புச் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது. அதாவது அது உடலைப் பருமனடையச்செய்யும் ரசாயன நடைமுறையை தாமதப்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரெட் ஒயினில் உள்ள இந்த வேதிப்பொருள் கொழுப்பு செல்களை உருவாக்கும் இன்சுலின் திறனை சிறப்பாகத் தடை செய்கிறது. இதேபோல் ரெட் ஒயினில் உள்ள piceatannol வேதிப்பொருளினால் இருதய மற்றும் நரம்புத் தளர்ச்சி உள்ளிட்ட நோய்களும் தடுக்கப்படுகிறது. இது புற்று நோயிலிருந்தும் காக்கிறது என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இப்போது இந்த ரெட் ஒயினில் காணப்படும் இந்த வேதிப்பொருளை வேறு மாற்று வடிவங்களில் கொடுக்க முடியுமா என்ற ஆய்வு நடைபெற்று வருவதாக இது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட டாக்டர் கிம் கூறியுள்ளார். ரெட் ஒயினில் காணப்படும் இந்த வேதிப்பொருள் திராட்சை, மற்றும் புளூபெர்ரி போன்ற பழங்களிலும் உள்ளது. இந்த ஆய்வு முடிவு பயலாஜிக்கல் கெமிஸ்ட்ர்ய் என்ற மருத்துவ இதழில் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோன்ற ஆய்வினை பாஸ்டனில் உள்ள ப்ரிகாம் பெண்கள் மருத்துவமனை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். 39 வயதிற்கு மேற்பட்ட 19000 பெண்களிடம் 13 ஆண்டுகளாக அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் சிவப்பு ஒயின் உடல்பருமனை குறைப்பது கண்டறியப்பட்டது. ஆரோக்கியத்தோடு மனம் தொடர்பான சிக்கல்களையும் சிவப்பு ஒயின் தீர்த்து வைக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply