தினசரி 2 கிண்ணம் சூடான தேநீர் அருந்தினால் கர்ப்பவதிகளுக்கு சிறந்ததாம்

Loading...

தினசரி 2 கிண்ணம் சூடான தேநீர் அருந்தினால் கர்ப்பவதிகளுக்கு சிறந்ததாம்பெண்கள் தினசரி இரண்டு கிண்ணம் சூடான தேநீர் அருந்தினால் கர்ப்பம் தரித்து குழந்தை பெறும் வாய்ப்பு அதிகரிப்பதாக பிரித்தானிய பிந்திய ஆய்வொன்று கூறுகிறது.

குளிரான மற்றும் சூடான பானங்களை அருந்துவதால் மனிதனுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து லண்டன் போஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சூடான தேநீரை அருந்துவதால் பெண்களின் கர்ப்பம் தரிக்கும் ஆற்றல் அதிகரிக்கும் அதே சமயம், இரசாயனப் பொருட்கள் கலந்த குளிர்மையான பானங்களை அருந்துவது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேற்படி பானங்கள் இரு கிண்ணங்கள் வீதம் தினசரி அருந்தினால் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு 20 வீதத்தால் குறைவடைகிறது.

கோப்பி அருந்துவதால் கர்ப்பம் தரித்தல் தொடர்பில் எதுவித பாதிப்பும் ஏற்படுவதில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply