தர்பாரி தால்

Loading...

தர்பாரி தால்மசூர்தால் – 1/4 கப்,
துவரம்பருப்பு – 1/4 கப்,
வெங்காயம் – 1, தக்காளி – 1,
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலாத் தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு, சீரகம் -1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்,
வெண்ணெய் – 1/2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1,
கசூரிமேத்தி – 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – அலங்கரிக்க.

மசூர்பருப்பு மற்றும் துவரம்பருப்பை அரை மணிநேரம் ஊற வைத்து பிரஷர் குக்கரில் 3 விசில் விட்டு வேக வைக்கவும். கடாயில் வெண்ணெய், எண்ணெய் சேர்த்து பச்சைமிளகாய், சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பொன்னிறமானவுடன் பொடியாக அரிந்த தக்காளி, கரம்மசாலாத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது அதில் வேக வைத்த பருப்பு கலவையை கொட்டி கசூரிமேத்தி, கொத்தமல்லித் தழை சேர்த்து கொதிக்க விட்டு சூடாக சப்பாத்தி அல்லது புரோட்டாவுடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply