தக்காளி தால்

Loading...

தக்காளி தால்
தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 6 பல்லு
பச்சை மிளகாய் – 5
தக்காளி – 3
பாசிப்பருப்பு – 1/2 கப்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
கரம்மசாலா – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
எலுமிச்சை – 1 சிறியது


செய்முறை:

வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாக அரிந்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, சீரகம் போட்டு தாளித்தபின்பு பூண்டு, அரிந்த பச்சைமிளகாய், வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியைச் சேர்த்து வதக்குங்கள். பருப்பை போதுமான தண்ணீர்விட்டு தனியாக வேக வைத்து பின் அதில் வதக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி இவற்றைச் சேர்க்கவும். உப்பு, மஞ்சள்தூள், கரம்மசாலா இவற்றைச் சேர்த்து கலக்கவும். சிறிது நேரம் வேக வைக்கவும். பின் அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, எலுமிச்சம் சாறு சேர்க்கவும். இரவு நேரங்களில் சப்பாத்திக்கு சுலபமான ஸைடு டிஷ் இது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply