தகவல்களை வேகமாக பறிமாற்றம் செய்வது எப்படி

Loading...

தகவல்களை வேகமாக பறிமாற்றம் செய்வது எப்படிகணினி யுகத்தில் தகவல்களை பறிமாற்றம் செய்வது ஃப்ளாப்பி டிஸ்க்களில் துவங்கி இன்று மெமரி கார்டு மற்றும் பல ஆன்லைன் சேவைகள் வரை பட்டியல் நீள்கின்றது எனலாம். என்ன தான் பட்டியல் நீண்டாலும் தகவல்களை பறிமாற்றம் செய்து முடிக்கும் வரை காத்திருக்க பலருக்கும் பொறுமை இருப்பதில்லை..

டிஜிட்டல் காலத்தில் தகவல் பறிமாற்றும் செய்வது முன்பை விட வேகமாகி இருக்கின்றுது என்பதே உண்மை. நிலமை இப்படி இருக்க தகவல் பறிமாற்றம் செய்ய ஏன் அதிக நேரம் எடுத்து கொள்கின்றீர்கள்..?

கணினி, மொபைல் என எவ்வித கருவியிலும் வேகமாக தகவல்களை பறிமாற்றம் செய்வது எப்படி என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்..!


விண்டோஸ் டூ விண்டோஸ் :

விண்டோஸ் கணினியில் இருந்து மற்றொரு விண்டோஸ் கணினிக்கு தகவல்களை பறிமாற்றம் செய்ய ப்ளூடூத் அல்லது வை-பை டைரக்ட் பயன்படுத்தலாம்.


ப்ளூடூத் :

ப்ளூடூத் மூலம் தகவல்களை பறிமாற்றம் செய்ய இரு கணினிகளிலும் ப்ளூடூத்-கம்பாடிபிள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வை-பை டைரக்ட் மூலம் செய்ய இரு கருவிகளிலும் வை-பை இணைக்கப்பட்டிருந்தால் போதுமானது, இம்முறறை சற்று அதிக வேகத்தில் செயல்படும்.


ஷேர்டு ஃபோல்டர் :

அடிக்கடி இரு கணினிகளுக்கிடையே தகவல்களை பறிமாற்றம் செய்ய ஷேர்டு ஃபோல்டர் ஒன்றை செட் அப் செய்து வைத்து கொள்ளலாம்.


மற்ற கணினி :

விண்டோஸ் கணினியில் இருந்து மற்ற கணினிகளுக்கு தகவல்களை பறிமாற்றி கொள்வது எப்படி என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..


விண்டோஸ் டூ லைனக்ஸ் :

விண்டோஸ் கணினியில் இருந்து லைனக்ஸ் கணினிகளுக்கு தகவல்களை பறிமாற்றம் செய்ய இரு கணினிகளிலும் cifs-utils இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

லைனக்ஸ் கணினியில் இருந்து விண்டோஸ் கணினிகளை இயக்க samba இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.


விண்டோஸ் டூ ஐஓஎஸ் :

விண்டோஸ் கணினியில் இருந்து ஐஓஎஸ்களுக்கு தகவல்களை பறிமாற்றம் செய்ய ஐட்யூன்ஸ் சென்று சின்க்ரனைஸ் செய்ய வேண்டும்.


ஃபைல் ஆப் :

ஐபோன் மற்றும் ஐபேட் கருவிகளுக்கு கிடைக்கும் இந்த செயலி ஆண்ட்ராய்டு ஃபைல் மேனேஜர் போன்றதாகும், இதன் மூலம் எவ்வித ஃபைல்களையும் பயன்படுத்த முடியும்.


விண்டோஸ் டூ ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு கருவிகளை எப்டிபி சர்வராக மாற்றும் பல செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கின்றது. சர்வர் ஆன் செய்யப்பட்டிருக்கும் போது எவ்வித கணினியும் இணைத்து கொள்ள முடியும்.


ட்ராப் பாக்ஸ் :

மேல் குறிப்பிடப்பட்டிருக்கும் வழி முறைகளை தவிர ட்ராப் பாக்ஸ் போன்ற சேவைகளையும் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதற்கு உங்களது கருவிகளை சார்ந்ததே ஆகும். சில கருவிகளில் இந்த செயலி வேலை செய்யாமல் போகவும் வாய்ப்புகள் இருக்கின்றது.


விண்டோஸ் டூ மேக்:

விண்டோஸ் கணினியில் இருந்து மற்ற கணினிகளுக்கு தகவல்களை பறிமாற்ற NTFS ஃபார்மேட் ஃபைல் பயன்படுத்த வேண்டும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply