டோக்ளா

Loading...

டோக்ளாகடலைமாவு – 1 கப்
தண்ணீர் – 1 கப்
லெமன் சால்ட் (சிட்ரிக் ஆசிட்) – அரை டீஸ்பூன்
ஆப்ப சோடா – அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்தாளிக்க:-

கடுகு – அரை டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்செய்முறை:-

கடலை மாவுடன் உப்பு, லெமன் சால்ட், தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரையுங்கள். ஒரு அகலமான பாத்திரத்தில் கால் பாகம் தண்ணீர் வைத்து சூடாக்குங்கள். சற்று உயரமான விளிம்புள்ள தட்டில் எண்ணெய் தடவுங்கள். 1 டீஸ்பூன் சூடான தண்ணீரில் ஆப்ப சோடாவை கரைத்து கடலை மாவு கலவையில் சேர்த்து கலக்குங்கள். இது நுரை போல் பொங்கும். இக்கலவையை எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றுங்கள்.

சூடான தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் ஒரு சிறிய கிண்ணத்தை “ஸ்டாண்ட்” மாதிரி கவிழ்த்துப் போட்டு அதன் மேல் கலவை ஊற்றிய தட்டை வைத்து மூடுங்கள். நடுத்தர தீயில் நன்கு வேகவிடுங்கள். (வெந்துவிட்டதா என்பதை அறிய, ஒரு கத்தியை மாவுக்குள் குத்தி எடுத்தால் ஒட்டாமல் வரும்). இதை வெளியே எடுத்து ஆறவிட்டு, துண்டுகளாக்குங்கள்.

எண்ணெயைக் காய வைத்து கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய மிளகாய், பெருங்காயம் தாளித்து, அரை கப் தண்ணீரில் சர்க்கரையை கரைத்து அத்துடன் சேருங்கள். கொதித்ததும் டோக்ளா மேல் பரவினாற் போல் ஊற்றுங்கள். தேங்காய் துருவல், மல்லி, காரப்பொடி தூவி அலங்கரியுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply