டுவிட்டரில் நீங்களும் வாக்கெடுப்பு நடத்தலாம்

Loading...

டுவிட்டரில் நீங்களும் வாக்கெடுப்பு நடத்தலாம்குறும்பதிவு சேவையான ட்விட்டர் மூலம் நீங்கள் விரும்பும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதோடு, இனி நீங்கள் விரும்பினால் வாக்கெடுப்பும் நடத்திக்கொள்ளலாம். இதற்கான புதிய வசதியை ட்விட்டர் அறிமுகம் செய்துள்ளது.

ட்விட்டர் போல்ஸ் ( Twitter polls ) எனும் பெயரில் இந்த வசதி அறிமுமாகி இருக்கிறது. இந்த வசதி மூலம் ட்விட்டர் பயனாளிகள் தாங்கள் பதில் அறிய விரும்பும் கேள்வியை கேட்டு, ட்விட்டர் ஃபாலோயர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தலாம்.

குறும்பதிவுகளை வெளியிடும் கட்டத்தின் கீழ், வாக்கெடுப்பிற்கான இந்த வசதி இடம்பெற்றுள்ளது. கம்போஸ் எனும் அந்த கட்டத்தில் கிளிக் செய்து ,கேள்வி மற்றும் அதற்கான பதில்களுக்கான வாய்ப்பை அளித்து பயனாளிகள் வாக்களிக்க கோரலாம்.

இந்த வாக்கெடுப்பு வசதி தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து பயனாளிகளுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆக, இனி ட்விட்டரில் நீங்கள் எளிதாக வாக்கெடுப்பு நடத்திக்கொள்ளலாம். மற்றவர்கள் நடத்தும் வாக்கெடுப்பிலும் பங்கேற்று கருத்து தெரிவிக்கலாம்.

இணைய வாக்கெடுப்பு நடத்துவதற்கென்றே சில இணையதளங்கள் இருந்தாலும், ட்விட்டரில் அறிமுகமாகியுள்ள இந்த வசதி, அதன் பரந்து விரிந்த பயனாளிகள் பரப்பை பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது.

ஏற்கனவே அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த வசதியை பயன்படுத்தி தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பை நடத்தி வருகின்ற்னர். அமிதாப்,( https://twitter.com/SrBachchan) இந்தியா-பாகிஸ்தான் ஐந்தாவது ஒரு நாள் போட்டிக்கு முன்னதாக, எந்த அணி வெற்றி பெறும் என வாக்கெடுப்பு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆக ட்விட்டரில் இனி ஹாஷ்டேகை மட்டும் அல்ல, வாக்கெடுப்புகளையும் கவனிக்க வேண்டும்!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply