டாப் 10 லிஸ்டில் இணைந்தது சவுதி அரேபியாவின் சூப்பர் கம்பியூட்டர்

Loading...

டாப் 10 லிஸ்டில் இணைந்தது சவுதி அரேபியாவின் சூப்பர் கம்பியூட்டர்உலகில் அதிக வினைத்திறன் கொண்ட கணனிகளாக சூப்பர் கம்பியூட்டர்கள் காணப்படுகின்றன.

இவற்றில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் கம்பியூட்டர்கள் முன்னணியில் திகழ்கின்றன.

இவ்வாறான கம்பியூட்டர்களுடன் முதன் முறையாக மத்திய கிழக்கு நாடு ஒன்றின் சூப்பர் கம்பியூட்டர் இணைந்துள்ளது.

இக் கம்பியூட்டரானது சவுதி அரேபியாவிலுள்ள கிங் அப்துல்லா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரிவில் காணப்படும் Shaheen II ஆகும்.

இக் கம்பியூட்டரானது 6,000 இற்கும் அதிகமான நொட்ஸ்ஸில் சுமார் 200,000 வரையான புரோசஸ்களை மேற்கொள்ள வல்லதாக இருப்பதுடன், 17.6 Petabytes சேமிப்பு நினைவகம் மற்றும் 790 Terabytes RAM என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இக் கம்பியூட்டரினால் ஒரு செக்கனில் செய்யப்படும் வேலைகளை செய்து முடிப்பதற்கு மனிதனுக்கு 32,000,000 வருடங்கள் எடுக்கும் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply