ஜேர்மன் தொழில்நுட்பக் கண்காட்சியில் அசத்திய எறும்பு ரோபோ

Loading...

ஜேர்மன் தொழில்நுட்பக் கண்காட்சியில் அசத்திய எறும்பு ரோபோஎறும்பை மாதிரியாகக் கொண்ட ரோபோவை ஜெர்மனி விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். ஜெர்மனியின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஃபெஸ்டோ இதனை வடிவமைத்துள்ளது. ஜெர்மனியில் நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த தொழில்நுட்ப கண்காட்சியில் இந்த ரோபோ அனைவரையும் கவர்ந்தது. மனிதனின் உள்ளங்கை அளவில் இருக்கும் இந்த ரோபோ, தொழிற்சாலை பயன்பாட்டுக்காக இதுவரை கண்டிபிடிக்கப்பட்ட ரோபோக்களில் மிகச் சிறந்தது.

எறும்பை போல தோற் றமளிக்கும் இந்த ரோபோக்களை தொழிற்சாலைகளில் நாளைய தொழிலாளர்கள் என்றால் மிகையாகாது. ஏனெனில் அதன் கால்கள் மிகவும் நுட்பமாகவும் நேர்த்தி யாகவும் பணிகளை செய்து முடிக்கும். கால்கள் 6 தனித்தனி பகுதிகளாக இணைக்கப்பட்டுள்ளன. எனவே பணியின் தேவைக்கு ஏற்ப ரோபோவால் தன்னை மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த ரோபோக்கள் கூட்டாக ஒரு பணியில் ஈடுபடும்போது தங்களுக்குள் ஒருங்கிணைப்புடனும், ஒத்துழைப்புடனும் நடந்து கொள்ளும் சிறப்புத் திறனுடையவை. அதாவது உணவு சேகரிப்பில் எறும்புகள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுகின்றனவோ அது போல ஒன்றுக்கு ஒன்று உதவிக் கொள்ளும்.

இந்த ரோபோக்களில் ஸ்டீரியோ கேமர், ப்ளோர் சென்சார், ரேடியோ மோடுல் உள்ளன. பல தொழில்நுட்பங்களை ஒருங்கிணைந்து இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. மிகக் குறைவான மின்சக்தியில் இயங்கக் கூடியது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply