ஜவ்வரிசி லட்டு

Loading...

ஜவ்வரிசி லட்டு

தேவையானவை:

ஜவ்வரிசி – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய்ப் பொடி – 1 ஸ்பூன்
நெய் – 50 கிராம்
முந்திரிப் பருப்பு & திராட்சைசெய்முறை:

ஜவ்வரிசியை வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ளவும். பின்பு அதை மிக்ஸியில் நைசாகப் பொடிக்கவும். சர்க்கரையைத் தனியாகப் பொடித்துக் கொள்ளவும். அல்லது கடைகளில் விற்கும் சர்க்கரைப் பொடியையும் பயன்படுத்தலாம். ஜவ்வரிசிப் பொடி, சர்க்கரைப் பொடி, ஏலக்காய்ப் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, நெய் அனைத்தையும் கலந்து பிசைந்து உருண்டைகள் பிடிக்கவும். தேவைப்பட்டால் சிறிது பால் தெளித்துக் கொள்ளலாம். இந்த ஜவ்வரிசி லட்டை செய்வது எளிது. அதேபோல் சுவையும் நன்றாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply