சோயா பீன்ஸ் சுண்டல்

Loading...

சோயா பீன்ஸ் சுண்டல்
தேவையானவை:

சோயாபீன்ஸ் – 1கப்
கேரட் துருவல் – கால் கப்
தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
பொடியாக அரிந்த குடமிளகாய் – கால் கப்
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் தாளிக்க
கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், கொத்துமல்லி
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

சோயா பீன்ஸை முதல் நாள் இரவே ஊற வைத்து நன்றாகக் கழுவி நீரை வடிய வைத்து பின் குக்கரில் சிறிது உப்பு சேர்ர்த்து 2 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து பிறகு வேகவைத்த சோயா பீன்ஸை போடவும். சற்று வதங்கியதும் அதில் தேங்காய் துருவல், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். கடைசியாக சிட்டிகை உப்பு, கேரட், குட மிளகாய் இவற்றைப் போட்டு கிளறி இறக்கவும்.பச்சை, வெள்ளை, சிவப்பு என நம் தேசிய கொடி போன்று “ட்ரை கலர்” சோயா சுண்டல் ரெடி. அதிக அளவு புரோட்டீன் சத்து நிறைந்தது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply