செல்பிகளை காப்பியாக குடிக்கலாம் புதிய தொழில்நுட்பம்

Loading...

செல்பிகளை காப்பியாக குடிக்கலாம்  புதிய தொழில்நுட்பம்சாதாரணமாக ஆரம்பித்த செல்பி மோகம் தற்போது உலகத்தையே ஆட்டிப்படைக்கும் விஷயமாக மாறிவிட்டது. செல்பி எடுப்பதற்கு என்றே சிறப்பு போன்கள் தயாரிக்கும் அளவிற்கு செல்பி மக்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக லண்டனில் 3டி பிரிண்டர் தொழில்நுட்பம் அடிப்படையில் காப்பி இயந்திரம் ஒன்று நுரையை பயன்படுத்தி செல்பிகளை வரையும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் நீங்கள் எடுக்கும் செல்பிகளை அச்சு அசலாக, அதேபோல் காப்பியில் வரையும் புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உங்கள் செல்பி, புகைப்படம் அல்லது செய்திகள் ஆகியவற்றை இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆப் மூலம் கடைகாரர்களுக்கு அனுப்பவேண்டும். அடுத்த 10 வினாடிகளில் நீங்கள் அனுப்பிய படங்கள் காப்பியின் மேற்பகுதியில் அழகாக மிதந்து கொண்டிருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply