செல்ஃபி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலி ஈகோ

Loading...

செல்ஃபி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலி ஈகோசெல்ஃபி புகைப்படங்களை மட்டும் போஸ்ட் (Post) செய்வதற்காக, ’ஈகோ’ (Ego) என்னும் சமூக வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில், மக்கள் தங்கள் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் செல்ஃபி எடுத்து பதிவு செய்ய பேரார்வம் காட்டி வருகின்றனர்.

பிரபலங்கள், கல்லூரி மாணவர்கள், அரசியல் தலைவர்கள் என வயது வரம்பின்றி, அனைத்து தரப்பினரும் தூங்கும் அறைத் தொடங்கி துக்க வீடு முதல் அனைத்து இடங்களிலும் செல்ஃபி எடுத்து குவிக்கின்றனர்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒரு அங்கமாகவே மாறி விட்ட செல்ஃபிக்காகவே பிரத்யேக செயலியை சாம் வாட்டர் என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த செயலியை பற்றி சாம் கூறுகையில், மக்கள் தங்கள் சுகத்துக்கங்களை செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வது வழக்கமாகிவிட்டது.

ஆனால் பெரும்பாலான மக்கள் செல்ஃபிக்களை சமூக வலைத்தளங்களில் பகிர தயக்கம் காட்டுகின்றனர். எனவே செல்ஃபிக்களை பகிர்வதற்காகவே ’ஈகோ’ என்னும் செயலியை உருவாக்கியுள்ளேன். இதன் மூலம் மக்கள் ஒவ்வொரு தருணத்தையும் பகிரலாம்.

ஃபேஸ்புக்கை போல இதில் உங்களுக்கென்று நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்தி கொள்ளலாம். இதில் இணைய, மக்கள் Ego என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் பெயரை பதிவு செய்து, உங்களை பற்றி ஒரு வரியில் விளக்கமளித்து, செல்ஃபிக்களை பகிர தொடங்கலாம்.

மேலும் ஈகோ மூலம், பயனர்கள் செல்ஃபிக்களை வைத்து போர்ட்ஃபோலியோ உருவாக்கி, ’ஸ்டோரி புக்’ தயாரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply