செயற்கை அழகில் உள்ள ஆபத்து

Loading...

செயற்கை அழகில் உள்ள ஆபத்து* அழகு, நாகரிகம் என்ற பெயரில் புருவங்களைத் துளையிட்டு நகை அணிவது, தொப்புளைத் துளையிட்டு நகை அணிவது போன்றவற்றைச் செய்ய வேண்டாம். வரிசையாகக் காது மடல்களைக் குத்திக் கொண்டு நகை அணிவது கூட ஆபத்தாக முடியலாம். நரம்புகளில் பட்டால் ஆபத்து.

* நீலம், பச்சை மாதிரி கன்னாபின்னா நிறங்களில் ஐ லைனர், ஐ பென்சில் உபயோகிப்பது இன்றைய டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் ஃபேஷன். இவற்றிலுள்ள கெமிக்கல்கள் கட்டாயம் கண் பார்வை பாதிக்கும்.

* டார்க் நிற, மேட் ஃபினிஷ் (ஈரப்பதமே இல்லாதது, நீண்ட நேரம் நீடிப்பது) லிப்ஸ்டிக்குகளை உபயோகிப்பதை; தவிர்ப்பது நல்லது. உதடுகளை அழகாக, பளபளப்பாகக் காட்ட லிப் பாம் உபயோகிக்கலாம்.

* நகங்களை நீளமாக வளர்க்காமல், குட்டையாக வெட்டி விடுவது ஆரோக்கியமானது. உடல் நாற்றத்தைத் தவிர்க்க மிதமான வாசனையில் பெர்ஃப்யூம் உபயோகிக்கலாம். இதை கைகளின் மணிக்கட்டுப் பகுதியில் தடவிக் கொள்ளலாம்.

* பெண்கள் தினமுமே பேன்ட்டி லைனர் அணியலாம். அந்தரங்க உறுப்பு சுத்தத்துக்கு இது உதவும். தினம் இரவில் பல் தேய்த்து முடித்ததும், மவுத் வாஷ் உபயோகிக்கலாம். என்ன டீன் ஏஜ் பெண்களே கவனிச்சீங்களா!

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply