சிஸ் ரைஸ் பால்ஸ்

Loading...

சிஸ் ரைஸ் பால்ஸ்
தேவையானவை:

குழைய வேக வைத்த சாதம் – 2 கப், சிஸ் துருவல் – அரை கப், பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன், வேக வைத்த சேமியா – அரை கப், மைதா – கால் கப், மல்லி தழை – சிறிது, உப்பு – தேவைக்கு, எண்ணெய் – தேவைக்கு.


செய்முறை:

சாதத்தை கையால் நன்கு மசித்துக் கொள்ளுங்கள். மல்லித்தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மசித்த சாதத்துடன் சிஸ், பச்சை மிளகாய் விழுது, சேமியா, பொடியாக நறுக்கிய மல்லித்தழை, உப்பு, மைதா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

இந்தக் கலவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். சூடான சிஸ் பால்ஸீம் தொட்டுக்கொள்ள சாஸீம் இருந்தால், பெரியவர், சிறியவர் என வித்தியாசம் இல்லமால் நிமிடத்தில் காலி செய்துவிடுவார்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply