சிவப்பாக இல்லையே

Loading...

சிவப்பாக இல்லையேபாதிப் பெண்களின் பயங்கர வருத்தம் இதுதான்!

இதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ.. அது அனைத்தையும் செய்து பார்க்கிறார்கள் நம்மூர் பெண்கள். பாசிப் பயறு மாவில் தொடங்கி, அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட பியூட்டி கிரீம் வரை முகத்தில் தடவி முயற்சி செய்கிறார்கள். ஆனால் பிறந்த போது இருந்த நிறத்தை விட, கூடுதலான நிறத்தைப் பெறவே முடியாது என்ற உண்மை பலருக்குத் தெரிவதில்லை.

சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல அழகுக் கிரீம்களைப் பயன்படுத்துவதும் பியூட்டி பார்லர்களில் தவமாய் தவமிருப்பதும் பலரது வாடிக்கை.

பியூட்டி பார்லர்களுக்குச் செல்வது ஒன்றும் தவறில்லை. ஆனால் சரியான பார்லர்களைத் தேர்வு செய்யாவிட்டால், அப்புறம் கதி.. அதோகதிதான்!

“ஸ்கின் பாலிஷிங் அண்ட் பிரைட்டெனிங்” என்பதை மைக்ரோடெர்மாப்ரேசன் என்கிறார்கள். இது நம் தோலில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு, மிக மென்மையானதாகவும் பொலிவானதாகவும் மாற்றப்படும் முறைதான் இது. இதோடு, புதிய செல்கள் மற்றும் கலோஜன் உற்பத்தி தூண்டப்படுகிறது. இதனால் சருமம் புத்துணர்வு பெறுகிறது.

இந்த சிகிச்சை முகம் மற்றும் கழுத்துக்கானது. 45 நிமிடங்களில் செய்யக்கூடிய இந்த சிகிச்சையை 4 முறை மேற்கொண்டால் கண்டிப்பாக பளிச்சென வித்தியாசம் தெரியும். பிறக்கும் போது இருக்கும் கலரை மீண்டும் கொண்டு வர முடியும். ஆனால் அதே நிறம் தொடர்ந்து இருக்க வேண்டுமானால், தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முடி வேரையே அழிக்கும் விதத்தில்தான் மருத்துவர்கள் லேசர் ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்துகிறார்கள். சிகிச்சைக்குப் பிறகு, சிகிச்சை அளிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் முடிகள் வளர்வதில்லை. இச் சிகிச்சையை பல முறை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இது போக மணப்பெண்ணுக்கான “காயா குளோ” சிகிச்சை முறையையும் பயன்படுத்தலாம். இம்முறைப்படி வறண்ட, சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட, சமச்சீரில்லாத முகத்தில் உள்ள தோல் பாலிஷ் செய்யப்பட்டு பொலிவு பெறுகிறது. இறந்த தோல் செல்கள் நீக்கப்பட்டு, பின்னர் தோலுக்கு வழவழ தன்மை ஊட்டப்படுகிறது. புத்துணர்ச்சி தரும் தோற்றம் இதன் மூலம் கிடைக்கிறது.

இதைச் செய்ய ஒன்றே கால் மணி நேரம் ஆகும். 4 முறை இதைத் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டியிருக்கும்.

தீங்கில்லாத, நல்ல உணவு சாப்பிட்டு நன்றாகத் தூங்கி எழுந்தாலே இயற்கையிலேயே ஒரு அழகு கிடைக்கும். தூக்கம் அந்த அளவுக்கு அவசியம். யோகா, தியானம் மூலம் அமைதியான, ஆழ்ந்த தூக்கத்தையும் பெற முடியும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply