சிறந்த ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Xiaomi

Loading...

சிறந்த ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Xiaomiசீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் Xiaomi நிறுவனம் ஸமார்ட் கைப்பேசி சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றது.

இந்நிலையில் புதிதாக வடிவமைத்துள்ள Redmi 2 கைப்பேசியினை அடுத்தவாரம் பிரேஸிலில் அறிமுகம் செய்யவுள்ளது.

பிரேஸிலானது உலகிலுள்ள ஸ்மார்ட் கைப்பேசி சந்தைகளுள் முன்னணி வகிப்பதால் அங்கு அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கைப்பேசியானது 4.7 அங்குல அளவு 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரை, Snapdragon 410 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM, 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2,200 mAh மின்கலம் என்பவற்றினையும் கொண்டுள்ள இக்கைப்பேசியின் விலையானது 160 டொலர்கள் ஆகும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply