சாப்பிடும் போது செல்பி எடுக்க வந்துவிட்டது செல்பி ஸ்பூன்

Loading...

சாப்பிடும் போது செல்பி எடுக்க வந்துவிட்டது செல்பி ஸ்பூன்செல்பி ஸ்டிக் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்தே செல்பி பிரியர்கள் இன்னும் மீள முடியாமல் தவித்து வரும் நிலையில் தற்போது செல்பி ஸ்பூன் என்ற புதிய சாதனம் சந்தைக்கு வந்துள்ளது.

ஜெனரல் மில்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் ஆன, டோஸ்ட் கிரன்ச் இதை உருவாக்கியுள்ளது. சாப்பிடுவதை செல்பி எடுக்க முடியாமல் நிறைய பேர் தவிப்பதை நிறுத்தவே இந்த புதிய தயாரிப்பு என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

30 இஞ்ச் வரை விரியக் கூடிய இந்த ஸ்பூனின் மறுமுனையில் ஸ்மார்ட் போனை வைத்து இனி செல்பி எடுத்துக்கொள்ளலாம். செல்பி ஸ்பூன். காம் என்ற இணையதளத்தில் இந்த சாதனத்தை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இனி என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று பலர் இப்போதே புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply