சரியாக தூங்காத குழந்தைகளின் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் | Tamil Serial Today Org

சரியாக தூங்காத குழந்தைகளின் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்

Loading...

சரியாக தூங்காத குழந்தைகளின் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்சமீபத்திய ஆய்வு ஒன்று குழந்தைகள் 9 மணிக்கு முன்னதாக தூங்கச் சென்றால் உடல் பருமன் அதிகரிக்காது என்று கூறுகின்றது.
குழந்தைகளுக்கு தூங்கும் நேரத்தை திட்டமிட்டு சரியாக செய்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. உடல் பருமன் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பல்வேறு நோய்களையும் தருகிறது. இதனால் ஆயுள் முழுக்க நோயினால் அவதிப்படும் நிலைமையும் வந்துவிடும்.
குழந்தைகளுக்கு எந்த அளவு ஆரோக்கியமான உணவுகளை தர வேண்டுமோ, அதே அளவிற்கு சரியான தூக்கமும் அவர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். இல்லையெனில் உடல் எடை அதிகரித்துவிடும். தூங்கும்போதுதான் பல்வேறு வளர்சிதை மாற்றங்கள் நடைபெறுகின்றன. திசுக்களின் வளர்ச்சியும் ஏற்படும்.
தூங்கும் நேரத்திற்கும் உடல் பருமனுக்கும் வலுவான தொடர்பு உள்ளது. ஆகவே குழந்தைகளின் தூக்க நேரத்தில் ஓழுங்குமுறையை பெற்றோர்கள் கொண்டு வந்தால், குழந்தைகளின் அறிவுத்திறன், ஆரோக்கியம் இரண்டும் வலுபெறும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Loading...
Rates : 0
VTST BN