கோலி தட்டை

Loading...

கோலி தட்டைரவை – 1 கப்
மைதா மாவு – 1 கப்
அரிசி மாவு – 1 கப்
மிளகுப்பொடி – அரை டீஸ்பூன்
சீரகப் பொடி – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு


செய்முறை:

முதலில் ரவை, மைதா இரண்டையும் சிவக்க வறுத்து, ஆற வைத்துக் கொள்ளவும். பிறகு, இவற்றுடன் அரிசி மாவு, உப்பு, மிளகுப் பொடி, சீரகப் பொடி எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையில் 1 கரண்டி எண்ணெயை காய்ச்சி விடவும். பிறகு, குறைந்த அளவு நீர்விட்டு நன்றாக, கெட்டியாக கலக்கவும். வாழை இலையில் எண்ணெய் தடவி இந்தக் கலவையிலிருந்து சிறுசிறு கோலிகளாக உருட்டி ஆள் காட்டி விரலால் பட்டனைவிட சற்று பெரியதாக தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். “கரகர”, “மொறுமொறு” ஸ்நாக்ஸ் ரெடி.

Loading...
Rates : 0
VTST BN