கோதுமை உக்காரை

Loading...

கோதுமை உக்காரைகோதுமை மாவு – 1 கப்,
வெல்லம் – 1 கப் அல்லது தேவைக்கு,
ஏலக்காய்த்தூள் – 2,
நறுக்கிய முந்திரி – 10-12,
நெய், எண்ணெய் – தலா 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் பல் பல்லாக கீறியது அல்லது துருவியது – 1 டேபிள்ஸ்பூன்.
கோதுமை மாவை வெறும் கடாயில் சிவக்க வறுக்கவும். அடி கனமான ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். அதில் சிறிது எண்ணெய் விட்டு சுத்தப்படுத்திய பொடித்த வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் அதில் கோதுமை மாவைத் தூவி கைவிடாமல் கட்டி தட்டாமல் கிளறவும். தண்ணீர் வற்றி மாவு வெந்ததும் ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த தேங்காயை போட்டு நன்கு கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால் சிறிது நெய் சேர்த்து கிளறி படைத்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply