குளிர்சாதனப் பெட்டியின் அடுத்த லெவல்

Loading...

குளிர்சாதனப் பெட்டியின் அடுத்த லெவல்நம்ம ஊரு ஐஸ் பெட்டி ஞாபகத்துல இருக்குதா.. அதாங்க வெள்ளை தெர்மொக்கோல் பெட்டிகுள்ள ஐஸ் கட்டிகளை நிரப்பி, பொருட்களை போட்டு குளிர்ச்சியா வச்சிருப்பாங்களே, அதேதான்.! அப்படி ஆரம்பிச்சது, இப்போ சிங்கிள் டோர், டபுள் டோர், சைட் பை சைட் ரெஃப்ரிஜீரேட்டர் என வகை வகையாக வளர்ந்து கொண்டே போனாலும், ‘சரி போதும்’ என்று தொழில்நுட்பம் நிறுத்திக் கொண்டதாய் சரித்திரமே இல்லை.

அப்படியாக உருவானதுதான் இந்த பயோ ரோபட் ரெஃப்ரிஜீரேட்டர்..! பீர் ஊற்றினாலும் எழுதும் இந்த பேனா..! இந்த சாதனம் பயோ பாலிமர் என்ற ஒரு ஸ்பெஷல் ஜெல் மற்றும் அதிலிருந்து வெளிப்படும் ஒளி மூலமாக பொருட்களை குளிர வைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

ஏனைய குளிர்சாதன பெட்டிகளில் இருப்பது போன்று எந்த விதமான மோட்டரும் இதற்கு தேவையில்லை, அதனால் இது இயங்க மின்சாரம் துளிக்கூட தேவையில்லை.

வெறும் ஜெல் மட்டும்தான் உள்ளடக்கம் என்பதால் 90 % இடத்தையும் பொருட்கள் வைக்க பயன்படுத்த முடியும். இதை நேராக அல்லது சாய்வாக என சுவற்றில் எப்படி வேண்டுமானாலும் பொருத்தி வைத்துக் கொள்ளலாம்.

போன் பைத்தியம் வருது வழி விடுங்கோ..! இதில் பயன்படுத்தப்படும் பயோ பாலிமர் ஜெல் ஆனது வாசனையற்றது மற்றும் பிசுபிசுப்பு தன்மையற்றது. குளிரூட்டப்பட வேண்டிய பொருளை இந்த ஜெல்லுக்குள் திணித்து விட்டால், பதப்படுத்தும் வேலை படு ஜோராக நடக்கும்.

இந்த பயோ ரோபட் ரெஃப்ரிஜீரேட்டரை பார்க்கும் போது, குளிர் சாதனப்பெட்டியின் ஆரம்ப காலத்துக்கே போன மாதிரி இருக்கும், ஆனால் இது முழுக்க முழுக்க வாருங்காலத்திற்கு ஏற்ற அதிநவீன தொழில்நுட்ப கருவியாகும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply