காலிஃப்ளவர் சன்னா

Loading...

காலிஃப்ளவர் சன்னா
தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் (சிறியது) – 1
வெங்காயம் – 150 கிராம்
மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன்
தனியாப் பொடி – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
பட்டை – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
லவங்கம் – 2
பிரிஞ்சி இலை – 1
புதினா, மல்லித் தழை – சிறிதளவு
தயிர் – 1 கிண்ணம்
தேங்காய்ப் பால் – 1 ஒரு கிண்ணம்
எலுமிச்சைசாறு – 1 டீஸ்பூன்
கொண்டைக் கடலை – 200 கிராம்
உப்பு, மஞ்சள் பொடி, எண்ணெய் தேவையானது


செய்முறை:

கொண்டைக் கடலையை ஊற வைத்து, வேக வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கவும். எண்ணெய் காய்ந்ததும் மசாலாப் பொருட்களைப் போட்டு வதக்கவும். இத்துடன் நறுக்கிய காலிஃப்ளவர், வெங்காயம், தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகாய்ப் பொடி, தனியா பொடி போட்டு வதக்கி, பிறகு புதினா, தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். இத்துடன் எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்துக் கிளறி கெட்டியானதும் தேங்காய்ப் பாலைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். கலவை கெட்டியானதும் மல்லித் தழையைத் தூவி இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply