கற்றாழையின் மருத்துவ குணங்கள்

Loading...

கற்றாழையின் மருத்துவ குணங்கள்சோற்றுக்கற்றாழை என்பது பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்தது. இதில் ரோஜா இதழ்கள் போன்ற பெரிய அமைப்பும், தடிமனான சதையுள்ள இலைகளும் இருக்கும்.
இதன் ஜெல்லியை கற்றாழை சோறு என்பர், இந்த ஜெல்லி தான் அதிக குளிர்ச்சியை தரும் தன்மை கொண்டது.
விட்டமின் A, விட்டமின் B, விட்டமின் C,விட்டமின் E போன்ற விட்டமின்கள் அதிகமாக இருக்கின்றன.
மேலும் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்ற தாதுக்களும் இருக்கிறது.
மருத்துவ பயன்கள் சோற்றுக் கற்றாழையின் சோற்றை எடுத்து வெண்படையின் மீது தினமும் பூசிவர வெண்படை குணமாகும். கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் மற்றும் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும். வெயில் காலங்களில் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பிற்கு இந்த சோற்றுக் கற்றாழை சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் இது நல்ல உறக்கத்தை தூண்டுகிறது. பெண்களுக்கு உண்டாகும் நீர்க்கடுப்பு, வயிற்றின் எரிச்சலைக் குணப்படுத்துகிறது. சர்க்கரை நோய்க்கு கண் கண்ட மருந்தாக சோற்றுக் கற்றாழை திகழ்கிறது.

சோற்றுக் கற்றாழையை தினமும் ஜூஸாக தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பட்டு நமது உடலில் நோய் எதிப்பு சக்தியை தூண்டுகிறது. வாய்ப்புண்ணை ஆற்றவும், பற்களின் பாதுகாப்பிற்கு மிகச் சிறந்த மருந்தாக இந்த கற்றாழை பயன்படுகிறது. நமது உடலில் உள்ள தேவையில்லாத தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றும் தன்மை உடையது. தீயினால் ஏற்படும் காயங்கள் விரைவில் குணமாக முக்கிய பங்கு வகிக்கிறது. சோற்றுக் கற்றாழையை உரித்து அதில் உள்ள சோற்றுப் பகுதியை எடுத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நின்று முடி நன்கு அடர்த்தியாகவும்,கருமையாகவும் வளரும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், உலர்ந்த சருமம், வெயிலில் ஏற்படும் சரும பாதிப்புகள் போன்றவைகளை குணப்படுத்தும் சிறந்த மருந்தாக திகழ்கிறது. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply