கர்ப்ப கால நீரிழிவு நோயை தடுக்கும் முறைகள்

Loading...

கர்ப்ப கால நீரிழிவு நோயை தடுக்கும் முறைகள்கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவுநோய் பாதிப்பு, அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தை மூலம் மரபுவழியாக பரவலாம் என்பது பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, கருவுற்ற தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் இயற்கையிலேயே சுரக்கும் சில ஹார்மோன்கள் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்திவிடுகிறது.

அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக, கருவுற்ற தாய்மார்களின் கணையமும் கூடுதலாக இன்சுலினை சுரந்து இந்த அதிகப்படியான சர்க்கரையை ரத்தத்தில் கரைத்து விடுகிறது. இது இயற்கையான ஒன்று. ஆனால், ஒருசில பெண்களுக்கு, அவர்களின் கணையம் இந்த கூடுதலாக தேவைப்படும் சர்க்கரையை சுரப்பதில்லை.

இதனால் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் உண்டாகிறது. இதுவே கர்ப்பகால நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பெண்களோடு ஒப்பிடும்போது, இந்திய பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் 11 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மரபணுக்கூறுகள் மற்றும் குறைந்து வரும் உடல் உழைப்பு ஆகிய இரண்டு காரணிகள் இந்தியப் பெண்கள் மத்தியில் கர்ப்பகால நீரிழிவை தூண்டுவதாகவும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன. கர்ப்பகால நீரிழிவுநோய் காரணமாக, தாயின் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை கருவில் இருக்கும் குழந்தைக்கு தொப்புள்கொடி வழியாக சென்று குழந்தையின் கணையத்தையும் தூண்டி இன்சுலினை சுரக்கச் செய்கிறது.

இப்படி கருவில் இருக்கும்போதே குழந்தையின் கணையம் இன்சுலினை சுரப்பது தவறு. அப்படி சுரப்பதன் மூலம் கருப்பைக்குள்ளேயே குழந்தையின் எடை மிகவும் அதிகமாகி, இயற்கையான முறையில் பிரசவம் நடக்க முடியாமல் போய், பிரசவ காலத்தில் தாய்-சேய் இருவரின் உயிருக்கும் ஆபத்தாக முடியலாம்.

அது மட்டுமல்லாமல், குறைப்பிரசவம் நடப்பது, குழந்தையின் உள்ளுறுப்புகளில் குறைபாடு ஏற்படுவது போன்ற பல பிரச்சினைகள் இதனால் உருவாகக்கூடிய ஆபத்துக்களும் இருக்கின்றன. அதோடு, இத்தகைய குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் நீரிழிவுநோய் தாக்கும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

கருவுற்ற நான்காவது மாதம் முதல் தாயின் ரத்த பரிசோதனைகள் மூலம் கர்ப்பகால நீரிழிவுநோயை கண்டுபிடிக்க முடியும். கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களில் 90 சதவீதத்தினருக்கு உணவுக் கட்டுப்பாட்டின் மூலமே அவர்களின் நீரிழிவு பாதிப்பை கட்டுப்படுத்திவிட முடியும். மற்றவர்களுக்கு இன்சுலின் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply