கர்ப்ப கால உறவில் உங்களுக்கு சந்தேகமா

Loading...

கர்ப்ப கால உறவில் உங்களுக்கு சந்தேகமா`கர்ப்பகாலத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா, வேண்டாமா?’ என்பது தான் மகப்பேறு மருத்துவர்களிடம் கர்ப்பிணிப் பெண்கள் தயங்கி தயங்கி கேட்கும் கேள்வி. ஏனெனில் அந்த நேரத்தில் கர்ப்பிணிகளின் மனது, கணவனின் அருகாமைக்காக ஏங்கும் எனவேதான் அந்த கேள்வியை பெரும்பாலான பெண்கள் மருத்துவர்களிடம் கேட்கின்றனர்.

பெண்ணின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், கருவில் குழந்தையின் படிப்படியான வளர்ச்சி போன்றவை, பெண்ணுக்குள் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்தும். அதேபோல் பெண்மையின் பூரிப்போடு திகழும் மனைவியின் அழகு, கணவனுக்கு ஒருவித ஆசையை ஏற்படுத்தும். எனவே அந்த நேரத்தில் தாம்பத்ய உறவில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் தம்பதியருக்குள் ஏற்படுவது இயல்புதான்.

ஆனாலும் `கர்ப்ப காலத்தில் உறவு கொண்டால் பிறக்கும் குழந்தைக்கு ஆபத்து வரும்’ என்ற அச்சம், இரண்டு பேரையும் தவிக்கவைக்கிறது. கர்ப்ப காலத்தில் உறவு கொள்ள விரும்புவோர் கீழ்க் கண்ட விஷயங்களை நினைவில் கொள்வது நலம்.

கரு உருவான முதல் மூன்று மாதங்கள், மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலகட்டம். இத்தகைய நேரத்தில் கருவானது, கருப்பையில் சரியாக பொருந்தி இராது. எனவே, அந்த மாதிரி நேரங்களில் அபார்ஷன் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கணவனும் மனைவியும் செக்ஸ் வைத்துக் கொள்வதால்கூட, ஒருசில நேரங்களில் அபார்ஷன் ஆகலாம்.

அதனால் முதல் மூன்று மாதங்களில் அந்தமாதிரியான உறவு வேண்டாமே. அதேபோல ஒன்பதாவது மாதத்திலும் தாம்பத்ய உறவை தவிர்த்துவிடுங்கள். `இன்பெக்ஷன்’ ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாதே என்பதற்காகவே, இந்த அறிவுரை! `அப்படியானால் மற்ற ஐந்து மாதங்களில் தாம்பத்ய உறவு வைத்து கொள்ளலாமா?’ எந்த பிரச்னையும் இல்லாமல் நார்மலாக கர்ப்பமுற்றிருக்கும் பெண்கள், அதிக அலட்டல் இல்லாமல் உறவு வைத்துகொள்ளலாம்.

கர்ப்பகாலத்தில் சிரமமான பொஸிசன்களை தவிர்க்கவும். எளிதான வலி ஏற்படாத பொஸிசன்களை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண்டும். அன்பான அரவணைப்பும், முத்தங்களும் கூட சில சமயங்களில் கர்ப்பிணிப்பெண்ணுக்குப் போதுமானதாக இருக்கும். எனவே சிரமம் தராத தொடுகையுடன் கூடிய கணவரின் அருகாமையை, கர்ப்பிணியிடம் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

கர்ப்பிணிகளுக்கு சில சமயங்களில் அசதியும் சோர்வும் அதிகமாக இருக்கும். அதுமாதிரி நேரங்களில் மனைவியை கவனமாய் கையாளவேண்டும். கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளும் போது, சுத்தம்-சுகாதாரத்தை பேணவேண்டியது மிகவும் அவசியம். ஒவ்வொரு முறையும் உறவுக்குப் பிறகு, பெண்ணுறுப்பை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.

கருப்பையில் கரு தங்காமல் அடிக்கடி அபார்ஷனாகும் பெண்கள், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்கள், கவனமாக இருக்கவேண்டும் என்று டாக்டரால் எச்சரிக்கை செய்யப்படிருப்போர் பிரசவம் வரையிலுமே, தாம்பத்ய உறவை தவிர்ப்பது நல்லது. பெரும்பாலும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மன உளைச்சல் மிக அதிகமாக இருக்கும்.

அந்த நாட்களில், இவர்களுக்கு பெரும்பாலும் உறவில் வேட்கை இராது. அப்படிப்பட்டநிலையில் அவரை கட்டாயப்படுத்தி கணவன் உறவுக்கு சம்மதிக்க வைக்கக் கூடாது. அதனால் அந்த பெண் உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. இது குழந்தையின் மன வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுத்தலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply