கர்ப்ப காலத்தில் பெண்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள்என்ன‌

Loading...

கர்ப்ப காலத்தில் பெண்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள்..என்ன‌பெண்களின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், சிலர் அந்த மாற்றங்களைக் கண்டு திகைப்படைகிறார்கள். சிலர் பயப்படுகிறார்கள். சிலர் எதுவும் புரியாமல் விழிக்கிறார்கள். இன்னும் சிலருக்கு அந்த மாற்றங்கள் மேல் எரிச்சலோ, வெறுப்போ எழும். இவற்றைத் தவிர்க்க எவ்வாறான மாறுதல்கள் உடலில் ஏற்படுகின்றன என்று தெரிந்து கொள்வது நல்லதுதானே.

கர்ப்பகாலம் மூன்று கட்டங்களாக பிரிக்கப்படுகிறது. 1 முதல் 12 வாரம் வரை முதல்கட்டம் ஆகும். 13 வது வாரம் முதல் 27 வது வாரம் வரை இரண்டாவது கட்டம் ஆகும். 28 வாரம் முதல் 40 வாரம் வரை மூன்றாவது கட்டாமாகும். இந்த மூன்று கட்டத்திலும் பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பு அதிகரித்தலும் அதனால் பல்வேறு விதமான உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.

கரு உருவான நாளில் தொடங்கி கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம் வரும் உணர்வு ஏற்படும். காலை வேளைகளில் மட்டும் இது இருக்கும் என்பதில்லை. ஒரு நாளில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதுபோன்ற உணர்வுகள் நிகழக்கூடும். இது பனிரெண்டு வாரங்கள் வரை இருக்கும் இது நாளமில்லா சுரப்பிகளிலுள்ள ஹார்மோன்கள் மாறுபாட்டல் ஏற்படக் கூடும்.

மார்பகம் பெருத்தும், இலேசாக வலிப்பது போன்றும், லேசாக புடைத்தும் இருக்கும். இதுவும் ஹார்மோன்களின் மாறுதல்களால் மார்பகத்தில் பால் சுரக்க ஆரம்பிப்பதால் ஏற்படக்கூடியது. இவ்வாறு ஏற்படுவது மார்பகங்களைப் பால் கொடுப்பதற்குத் தயார் செய்வதற்கான அறிகுறியாகும்.

மூக்கு உள்பகுதியில் அதிக இரத்த ஓட்டத்தால் கூடுதல் அழுத்தம் ஏற்படும். இதனால் மூக்கடைப்பு ஏற்படுவதும் உண்டு. மேலும் அதிக அளவிலான உடல் சோர்வு இக்காலகட்டத்தில் இருக்கும். இதற்கு காரணம் குழந்தை உருவாகும்போது அதிக அளவு சக்தி உபயோகப்படுத்தப்படுவதே ஆகும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தலும் கர்ப்பிணிகள் சாதாரணமாகச் சொல்லக் கூடிய புகார்களில் ஒன்றுதான். இது கர்ப்பப்பை வளருவதால் அது அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையை அழுத்துவதால் ஏற்படும். மாவுப் பொருள்களின் மீது ஒரு மோகம் இருப்பதும் இயற்கையே. சில கர்ப்பிணிகள் அரிசியை அதிகமாக சாப்பிடுவார்கள். மசக்கை எனும் வாந்தி வரும் பெண்களுக்கு, இந்த மாவுப் பொருட்களின் மீது ஆசை ஏற்படுகிறது. ஏனெனில் இந்த மாவுப் பொருட்கள் தாகத்தைத் தணிக்க உதவும்.

இரண்டாம் கட்டத்து கர்ப்பத்தில் முதல் கட்ட உபாதைகள் குறைந்து ஒரு முழுமையான நலமான உணர்வு தோன்றும். இடுப்பு பெருத்து வயிற்றுப் பகுதி உறுதியாகும். நெஞ்சு எரிச்சல் அதிகரிக்கும். இது கர்ப்பப்பை வளருவதால் இரைப்பையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும், இரைப்பையில் அமிலம் சுரப்பது அதிகரிக்கும். கர்ப்பப்பை குடல்களை அழுத்துவதால் மலச்சிக்கல் ஏற்படும்.

உடல் விரிவடையும் அடையாளங்கள் மார்பிலும், வயிற்றுப் பகுதியிலும் தோல் விரிவடைவதால் தோன்றும். விரிவடையும் தோலினால் தோலில் அரிப்பு ஏற்படும். மார்பகக் காம்புகளிலும், தொப்புள் வரையும் தோலில் நிறமாறுதல் ஏற்படுவதால் கருப்பாக மாறும். குழந்தையின் அசைவுகளை சிறிய குத்துக்களைப்போல உணர முடியும்.

உணவில் புளிப்பான பழங்கள் மீதும், உப்பு அதிகமுள்ள உணவுகளான ஊறுகாய்கள் மீதும் ஆவலாய் இருப்பது இயற்கைதான். ஏனெனில், நெஞ்செரிச்சலை, புளிப்பான பதார்தங்கள் சிறிது குறைப்பதாய் உணர்வதோடு, உப்பினைக் குறைத்து சாப்பிடச் சொல்வதால் உப்பின் மீது ஆவலாகவும் இருப்பார்கள்.

மூன்றாவது கட்டத்தில் கர்ப்பிணிகளின் முதுகுக்கு ஆதரவளிக்கும் தசைநார் மற்றும் தசைகள் மீது அதிகமாக அழுத்தமிருப்பதால் முதுகுவலி ஏற்படுகிறது. உங்கள் உடலில் இரத்தத்தின் கொள்ளளவு அதிகரிக்கிறது. ஈர்ப்பு காரணமாக இரத்தம் கால்களுக்குச் செல்கிறது. ஆகையால், தசைகள் மீது அழுத்தம் ஏற்பட்டு, கால்களில் இழுப்பு வருகிறது. குழந்தை உதரவிதானம் மீது அழுத்துகிறது. சுவாசப் பை விரிந்து கொடுப்பதில்லை மற்றும் உங்களுக்கு வேண்டிய அளவு வாயு கிடைப்பதில்லை இதனால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. உறங்குவதில் கடினமாக இருக்கும். இதற்கு காரணம் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை மற்றும் எடை அதிகரிப்பினால் ஏற்படும் அசௌகரியங்களாகும்.

குழந்தையின் அசைவைக் காண முடிகிறது. இப்போது குழந்தையின் எடை கூடுகிறது மற்றும் அது உதைப்பதையும் விக்கலையும் கூட கர்ப்பிணிகள் உணர முடியும். இவை எல்லாம் இன்பமான அவஸ்தைதான். இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டவர்களுக்கு இந்த மாற்றங்கள் விரும்பத்தக்கவையாக இருக்கும். ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க மனம் தயாராகிவிட்ட உணர்வு எழும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். என்ன கர்ப்பிணிகளே தயாராகிவிட்டீர்களா

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply