கர்ப்ப காலத்திலும் அழகாக ஜொலிக்க வேண்டுமா

Loading...

கர்ப்ப காலத்திலும் அழகாக ஜொலிக்க வேண்டுமாபெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த கால கட்டத்தில் அவர்களது மனதில் ஒருவித சோர்வும் பயமும் தொற்றிக் கொள்கிறது.
அதனால் அவர்கள் தங்களது அழகு பராமரிப்பில் கொஞ்சம் கூட ஆர்வம் காட்டுவதில்லை. பெரும்பாலான நேரத்தை தூங்கியே வீணடித்து விடுகிறார்கள்.
கர்ப்ப காலத்தில் வருகிற பிரச்சினைகள் பற்றிய கவலைகளை படார் என வீசி எறிந்து விட்டு உற்சாகமாக இருங்கள்.
மேனி அழகையும் சிம்பிளான முறையில் பராமரியுங்கள். இது மனதிற்கு தன்னம்பிக்கை தருவதுடன் உற்சாகத்தையும் ஊற்றெடுக்க வைத்து விடும்.


கூந்தல் பராமரிப்பு

குழந்தை வளர்ச்சிக்காக எடுத்துகொள்கிற இரும்பு, பி.காம்ப்ளக்ஸ், விட்டமின்கள், கால்சியம், மாத்திரையில் கூந்தல் செழிப்பாக வளரும்.
தேங்காய் எண்ணை தடவி மசாஜ் செய்யலாம். நறுமண எண்ணை வேண்டாம். தலைக்கு குளித்தால் சாம்பிராணியோ டிரையரோ போட்டு ஈரமின்றி ஊறவையுங்கள்.


பேஷியல்

கர்ப்பிணி பெண்கள் மெஷின் உதவியின்றி வெறும் கைகளால் செய்யப்படுகின்ற பேஷியலை தாராளமாகச் செய்து கொள்ளலாம். மூலிகை பொருட்கள், பழங்கள், காய்கறி பயன்படுத்தி கையால் செய்கிற மசாஜ் உகந்தது. முகத்தில் மேலிருந்து கீழ்நோக்கி 5 நிமிடம் மசாஜ் செய்யும் போது உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறும். உடல் மசாஜும் செய்யலாம்.


கால்- கை பராமரிப்பு

முல்தானி மட்டி 4 ஸ்பூன், புரூட்சால்ட்(2) டேபிள் ஸ்பூன், ரோஸ் வாட்டர்-6 ஸ்பூன் இவற்றை கலந்து கால், பாதம், உள்ளங்கால் என எல்லா இடங்களிலும் தடவி, வட்டமாக மசாஜ் செய்யுங்கள். கால் வலி பறந்துவிடும்.


பிளீச் வேண்டாமே!

என்னதான் ஹெர்பல் பிளீச் என்றாலும் அது கெடாமல் பாதுகாக்க சிறிதளவாவது கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. பிளீச் செய்யும் போது தோலில் உள்ள துளைகள் வழியே இந்த கெமிக்கல் ரத்தத்தில் கலக்கிறது.
எனவே கர்ப்பிணிகள் ஒரு போதும் பிளீச் செய்யக்கூடாது. புருவத்தை அழகுபடுத்தலாம்!
வழக்கமாக புருவம் திருத்துகிறவர்கள் கர்ப்ப காலத்திலும் திருத்திக் கொள்ளலாம்.
அதிக முடிஇருந்தால் புருவத்தை திருத்தவே கூடாது. ஏனெனில் முடிவெட்டும்போது உணர்கிற வலி கர்ப்பபையில் உள்ள சிசுவையும் எட்டும்.
அது சரி, இனி பிரசவத்தில் ஏற்படுகிற தழும்பு பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று சொல்கிறேன். கவனமாக கேட்டுக்குங்க!
கர்ப்ப காலத்தில் வயிற்று தசைகளும், மார்பகங்களும் விரிவடைகின்றன.
அதனால் அந்தப்பகுதியில் அரிக்கிறது. சொறிவதால் அந்த இடத்தில் தசை காய்ந்து விடுகிறது. அதுதான் பிரசவத்துக்குப்பிறகு தழும்பாகிறது. இதைதான் ஸ்டிரெச் மார்க் என்பார்கள்.
மாதுளைத்தோலையும், பசு நெய்யையும் கலந்து 3-வது மாதத்தில் இருந்து வயிற்றிலும் மார்பகத்திலும் தடவுங்கள். இதற்குப் பதிலாக ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் யுவதயாதி என்ணையையும் பயன்படுத்தலாம். அரிக்கும் இடத்தில் வேப்பிலை அல்லது மெலிதான துணியால் தடவி கொடுங்கள்.

இப்படி செய்து வந்தால் பிரசவத்துக்கு பிறகு தழும்பா? அது எங்கே? என்பீர்கள்.

சீமந்த விழாவின் போது சில பெண்கள் கெமிக்கல் கலந்த மேக்- அப் போட்டுக் கொள்கிறார்கள். இந்த கெமிக்கலானது அவர் களின் உடலில் கலந்து குழந்தைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட வாய்ப்பிருக்கிறது.
அழகுக்கலை பற்றி முறையாக பயின்றவர்களிடம் மட்டும்தான் கர்ப்பிணி பெண்கள் அழகு படுத்திக்கொள்ள வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply