கர்ப்பிணிகளுக்கு வாந்தி வருவதை தடுக்க சில வழிகள்

Loading...

கர்ப்பிணிகளுக்கு வாந்தி வருவதை தடுக்க சில வழிகள்பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது, பெண்களுக்கு ஆரம்ப காலத்தில் அல்லது கர்ப்ப காலம் முழுவதும் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். இவ்வாறு கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடும் அனைத்தும் வாந்தி எடுக்கும் போது வெளியே வந்தால், நிச்சயம் கர்ப்பிணிகள் மிகவும் வலுவிழந்து இருப்பார்கள். பின் குழந்தை பிறக்கும் போது பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே வாந்தி வருவதைத் தடுக்கும் ஒருசில இயற்கை வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலம் சரிசெய்யலாம்.

* எலுமிச்சை பழத்தை துண்டுகளாக்கி, வெயிலில் 4 – 5 நாட்கள் காய வைத்து, பொடி செய்து கொள்ளலாம். பின், அந்த பொடியை வாந்தி வரும் மாதிரி இருக்கும் போது, சூடான நீரில் போட்டு, குடிக்க வேண்டும். இந்த செயலை மயக்கம் வருவது போது இருந்தாலும், குடிக்கலாம்.

* இஞ்சி டீ போட்டு குடித்தாலும், வாந்தி வருவதை சரிசெய்யலாம். எனவே கர்ப்பிணிகள் வெளியே செல்லும் போது சிறு துண்டு இஞ்சியை கொண்டு செல்வது நல்லது.

* கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் வாந்தியை கட்டுப்படுத்த, ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் சிறப்பானதாக இருக்கும். குறிப்பாக வெதுவெதுப்பான நீரில் ஜூஸ் போட்டு குடிப்பது நல்ல பலனைத் தரும்.

* ஒரு கப் மூலிகை டீ சாப்பிட்டாலும், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாந்தியை தடுக்கலாம். தற்போது நிறைய மூலிகை டீ உள்ளது. ஏன் இஞ்சியிலிருந்து, சீமைச்சாமந்தி டீ வரை எது வேண்டுமானாலும் குடிக்கலாம். இதனால் மயக்கம், குமட்டல், வாந்தி போன்றவற்றை குணப்படுத்தலாம்.

– மேலே சொன்ன குறிப்புகளை கொண்டு கர்ப்ப காலத்தில் வரும் வாந்தியை கட்டுப்படுத்தலாம். அப்படியும் வாந்தி வருவது நிற்க வில்லையென்றால் மருத்துவரை அணுகி ஆலோசனையை பெறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply