கர்ப்பமாக இருக்கும் போது இரத்தம் வருவதற்கான காரணங்கள்

Loading...

கர்ப்பமாக இருக்கும் போது இரத்தம் வருவதற்கான காரணங்கள்பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அதிகம் கவலைக் கொள்ளும் விஷயத்தில் ஒன்று தான் இரத்தம் வடிதல்.

இதனால் உயிருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால், கர்ப்பமாக இருக்கும் போது இரத்தம் வடிவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. காரணம் என்றதும் கர்ப்பத்தில் ஏற்படும் பிரச்சனையினால் மட்டும் தான் என்று நினைக்கக் கூடாது.

அதற்கும் மேலான சில காரணங்களும் இருக்கின்றன.

மேலும் இதனைப் பற்றி அமெரிக்க கருத்தரிப்பு கூட்டமைப்பு, சுமார் 20 முதல் 30 அனுபவமுள்ள பெண்களிடம் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் எந்த பிரச்சனைகளினால் இரத்தம் வடிய வாய்ப்புள்ளது என்ற ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

அதில் அவர்கள் ஒரு சில காரணங்களைச் சொல்லியிருக்கின்றனர். அந்த காரணங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

* சில பெண்களுக்கு கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் கருப்பையின் அகத்திரையில் முட்டை பொருந்துவதால், பிங்க் அல்லது ப்ரௌன் நிறத்தில் இரத்தம் வரும். அதுவும் இது கருவுற்ற 6 முதல் 12 நாட்களில் ஏற்படும். ஏனெனில் முதன் முதலில் கருமுட்டையானது கருப்பையில் போகும் போது, தாயின் இரத்த குழாயிலிருந்து சிறிது இரத்தம் வெளியேறும். இதிலும் இவை சில நாட்கள் சில நேரங்களில் மட்டும் தான் ஏற்படும்.

* கர்ப்பமாக இருக்கும் போது கருப்பை வாய்க்கு அதிகமான இரத்தம் பாயும். இதனால் மிகவும் சென்சிட்டிவ்வான கருப்பையானது சற்று அதிக அழுத்தத்திற்குட்பட்டு, இரத்தம் வடிகிறது. இவ்வாறு இரத்தம் வந்தால் எதற்கும் கவலைப் பட வேண்டாம்.

* நஞ்சுக்கொடியில் (placenta) ஏதேனும் இரத்தக்கட்டிகள் இருந்தால், இரத்தப்போக்கு ஏற்படும். சில சமயங்களில் அளவுக்கு அதிகமான இரத்தப்போக்கு கூட நேரிடும். அதுவே அந்த இரத்தக்கட்டிகள் அளவுக்கு அதிகமாக இருந்தால், அந்த நஞ்சுக்கொடி கருப்பையிலிருந்து பிளவுபட்டு, இறுதியில் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். இந்த சப்க்ரோனிக் ஹெமடோமாஸிற்கு என்று எந்த ஒரு தனி சிகிச்சையும் இல்லை. இந்த பிரச்சனை இருந்தால், மருத்துவர்கள் என்ன அறிவுறுத்துவார்கள் என்றால், தாயை நன்கு ஓய்வு எடுக்க சொல்வார்கள், உடலுறவு நிச்சயம் கொள்ளக்கூடாது என்று கூறுவார்கள், சில மருந்துகளான லோவெனாக்ஸ் அல்லது ஹெப்பரின் போன்ற மருந்துகளை உட்கொள்ளச் சொல்வார்கள். இவற்றை சரியாக மேற்கொண்டு வந்தால், இந்த பிரச்சனை இருந்தாலும் ஆரோக்கியமான பிரசவம் நடக்கும் வாய்ப்புள்ளது.

* கர்ப்பமாக இருக்கும் போது, அதிலும் ஆரம்ப காலத்தில் இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கருச்சிதைவிற்கு காரணமாகவும் இருக்கும். மேலும் அவ்வாறு வரும் இரத்தம் அடர்ந்த சிவப்பு நிறத்தில் வந்தால், அது நிச்சயம் கருசிதைவிற்கான இரத்தப்போக்கு தான் என்பதை உறுதிபடுத்தலாம். பெரும்பாலும் கர்ப்பத்தின் ஆரம்பத்தில் அதாவது முதல் 12 வாரத்தில் இந்த மாதிரியான இரத்தப்போக்கு ஏற்படும். இதற்கு காரணம் கருவின் வளர்ச்சி சரியாக இல்லாததே ஆகும்.

Loading...
Rates : 0
VTST BN