கண்ணைக் கவரும் கவர்ச்சியான புருவம் வேண்டுமா | Tamil Serial Today Org

கண்ணைக் கவரும் கவர்ச்சியான புருவம் வேண்டுமா

கண்ணைக் கவரும் கவர்ச்சியான புருவம் வேண்டுமாஅழகைப் பட்டியலிடும் போது புருவமும் ஒரு வகையான அழகு தான். அந்த புருவம் கண்களோடு தொடர்புடையது. நிறைய பேர் கண்களில் பேசுவார்கள், அப்போது புருவமும் அதில் பங்கு பெறும். ஒருவரைப் பார்த்தவுடன் கண்கள் மட்டும் கவருவதில்லை புருவமும் தான். அத்தகைய புருவத்தை நாம் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும். புருவம் நன்கு வளர நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே வளரச் செய்யலாம்.அடர்த்தியான புருவங்கள் பெற!

புருவங்களை சீர்திருத்திக் கொண்டால் பார்க்க முகம் அழகாகவும், வசீகரமாகவும் இருக்கும். மிக மெல்லிய புருவம் முகத்தை குண்டாகக் காட்டும். புருவம் அடர்த்தியாக இருந்தால் முகம் சற்றே ஒல்லியாக தெரியும்.

தினமும் குளிப்பதற்கு முன்பு அல்லது உறங்க செல்லும் முன்பு புருவத்தின் மயிர் காலில் படும்படி விளக்கெண்ணெயைத் தேய்க்க வேண்டும். பிறகு லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.

ஹார்மோன்கள் பிரச்சனையால் புருவத்தில் முடி கொட்டியிருந்தாலும் அங்கு இரத்த ஒட்டத்தை அதிகரித்து, அவை திரும்ப வளரவும், இந்த மசாஜ் முறை உதவும்.

சிலருக்கு புருவம் அதிக அடர்த்தியாக இருக்கும் அவர்கள் முக அமைப்பிற்கு ஏற்ப த்ரெட்டிங் செய்து கொண்டால் கண்களும், முகமும் வசீகரமாய் இருக்கும்.

வட்டமான முக அமைப்பைக் கொண்டவர்கள் புருவத்தின் ஆரம்பத்தில் இருந்து த்ரெட் செய்து நுனியில் செல்லும் போது சற்று வளைத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் நீள் வட்ட முகம் கொண்டவர்கள் புருவத்தின் கடைசியில் சிறிது வளைத்து த்ரெட் செய்து கொள்ளலாம். சதுரமான முகம் கொண்டவர்கள் நடுவில் சிறிது வளைவாக த்ரெட் செய்து கொள்ளலாம் முகம் வசீகரமாக இருக்கும்.

Loading...
Rates : 0
VTST BN