ஒரு நாளைக்கு சராசரியாக 14 செல்பிகள் எடுக்கும் இளைஞர்கள் கூகுள் தகவல்

Loading...

ஒரு நாளைக்கு சராசரியாக 14 செல்பிகள் எடுக்கும் இளைஞர்கள் கூகுள் தகவல்ஒரு சிலர் இதை மோகம் என்றும் மற்றவர்கள் இதை ஒரு மனநோய் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இளைஞர் இது எது பற்றியும் கவலைப்படாமல் ஒரு நாளைக்கு சராசரியாக 14 செல்பிகள் எடுப்பதாக கூகிள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தங்கள் ஸ்மார்ட்போனில் ஒரு நாளைக்கு 11 மணி நேரம் அல்லது அதற்கு மேல் செலவு செய்யும் இளைஞர்கள், சராசரியாக 14 செல்பிகள் எடுப்பதாகவும், 25 முறை சமூக ஊடகங்களுக்கு செல்வதாகவும் கூகுள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் 16 முறை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கிறார்கள்.

அதேசமயம் இளைய வயதை கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 2.4 செல்பியும், 4 முறை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கிறார்கள். மனிதர்களின் செல்போன் மோகம் ஒரு மனநோயா என்ற நோக்கில் உலகம் முழுவதும் ஆய்வுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply