ஒரு நாளுக்கான பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனை தொட்டுள்ளது

Loading...

ஒரு நாளுக்கான பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனை தொட்டுள்ளதுமுதன்முறையாக ஒரு நாளுக்கான பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனை தொட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பேக் தெரிவித்துள்ளார்.

இந்த சாதனை கடந்த திங்கட்கிழமை(24) படைக்கப்பட்டது. இதனடிப்படையில் பூமியல் வாழும் ஏழு பேரில் ஒருவர் பேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர். மேலும் 1.5 பில்லியன் பாவனையாளர்கள் ஒரு மாதத்தில் ஒரு முறையாவது பேஸ்புக்கினை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டிலேயே பேஸ்புக் ஒரு பில்லியன் பாவனையாளர்கள் எனும் மைற்கல்லை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2004ஆம் ஆண்டில் கல்லூரு மாணவராக மார்க் ஸக்கர்பேக் இருந்த காலப்பகுதியிலேயே பேஸ்புக் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply