ஒருவர் எப்­போது மர­ண­ம­டைவார் என்­பதை துல்­லி­ய­மாகக் கூறும் நவீன சூப்பர் கணினி

Loading...

ஒருவர் எப்­போது மர­ண­ம­டைவார் என்­பதை துல்­லி­ய­மாகக் கூறும் நவீன சூப்பர் கணினிநோயாளி எப்­போது மர­ண­ம­டைவார் என்­பதை 96 சத­வீதம் துல்­லி­ய­மாக கூறும் நவீன சூப்பர் கணி­னி­யொன்றை வடி­வ­மைத்­துள்­ள­தாக அமெ­ரிக்க போஸ்டன் நகரைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள் உரிமை கோரி­யுள்­ளனர்.

பெத் இஸ்ரேல் டீகொனஸ் மருத்­துவ நிலை­யத்தைச் சேர்ந்த மருத்­துவ கலா­நிதி ஸ்டீவன் ஹோர்ங் தலை­மை­யி­லான ஆய்­வா­ளர்­களால் இந்த சூப்பர் கணினி வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

நோயா­ளி­களின் உடல் நிலையைக் கண்­கா­ணிக்கும் கரு­வி­களை இந்த சூப்பர் கணி­னி­யுடன் இணைத்த போது, அந்தக் கணினி மருத்­து­வர்­களை விடவும் சிறப்­பாக நோயா­ளி­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள நோய்­களை இனங்­கண்­ட­றிந்­த­தாக ஸ்டீவன் ஹோர்ங் தெரி­வித்தார்.

மேற்­படி சூப்பர் கணினி மருத்­துவ கண்­கா­ணிப்பு உப­க­ர­ணங்­களைப் பயன்­ப­டுத்தி நோயா­ளி­களின் உட­லி­லுள்ள ஒட்­சிசன் மட்டம் மற்றும் குருதி அமுக்கம் உள்­ள­டங்­க­லாக அனைத்­தையும் அள­வீடு செய்­கின்­றது. மேலும் இந்த முறை­மை­யா­னது நோயா­ளியின் உடல் நலம் தொடர்­பான தக­வல்­களை ஒவ்­வொரு 3 நிமி­டங்­க­ளுக்கு ஒரு தட­வையும் சேக­ரிக்­கி­றது.

அந்தக் கணி­னியில் கடந்த 30 வரு­டங்­க­ளி­லான 250,000க்கு மேற்­பட்­ட­வர்­களின் உடல் நலம் தொடர்­பான விப­ரங்கள் உள்­ளீடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அந்தத் தக­வல்­களின் அடிப்­ப­டையில் புதி­தாகப் பெறப்­பட்ட நோயா­ளி­களின் உடல் நலம் தொடர்­பான தக­வல்­களைப் பகுப்­பாய்வு செய்தே அந்த நோயாளி எப்­போது மர­ண­ம­டைவார் என்­பதை அந்தக் கணினி கணித்துக் கூறு­வ­தா­க வும் அவர் கூறினார்.

“நீங்கள் இறக்கப் போகி­றீர்கள்” என ஒரு நோயாளிக்கு அந்தக் கணினி எதிர்வு கூறுமானால், அவர் அடுத்து வரும் 30 நாட் களுக்குள் இறக்கப் போகிறார் என கருத முடியும் என்று ஸ்டீவன் ஹோர்ங் தெரிவித்தார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply