எளிதில் உடையாத ஸ்கிரீனுடன் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்

Loading...

எளிதில் உடையாத ஸ்கிரீனுடன் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்உலகின் ஏதோவொரு மூலையில் ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் ஒரு ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் உடைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றின் மூலமாகத் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு முறையும் உங்கள் கைதவறி ஸ்மார்ட்போன் கீழே விழும்போதும், அதன் ஸ்கிரீன் பக்கமாகவே விழுந்து உடைந்துபோவதை கவனித்ததுண்டா? மென்மையான அமைப்பைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள், ஸ்கிரீன் பக்கம் மேற்புறமாக விழுந்தால் ஸ்கிரீன் உடைவதிலிருந்து தப்பிக்கலாம். ஆனால், விழும் முன் அதிகளவில் அது காற்றிலேயே உருள வேண்டும்.

இந்தப் பிரச்சனையை சமாளிக்கும் ஸ்மார்ட்போனாக ‘மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ்’ தயாராகியுள்ளது. ஷட்டர்ஷீல்டு தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ள இந்தப் போனின் ஸ்கிரீன் ஐந்தடுக்குகளுடன் உள்ளதால், தவறுதலாக கீழே விழுந்தாலும் பாதிப்படையாது.

5.4 இன்ச் ஸ்கிரீன் அளவைக்கொண்ட இந்தப் போனின், பின் கேமரா 21 மெகா பிக்சல்களுடனும், முன் கேமரா 5 மெகா பிக்சல்களுடனும் உள்ளது. மேலும், 3ஜிபி ரேம் கொண்ட இந்தப் போன் ஆண்டிராய்டு 5.1.1 லாலிபாப்புடன் வெளிவந்துள்ளது. 32/64ஜி.பி. சேமிக்கும் வசதி கொண்ட இந்தப் போன் இந்தியாவில் சுமார் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்களுடன் போட்டிப் போட்டு வெற்றியடைந்துள்ள இந்த மோட்டோவின் வீடியோ உங்கள் பார்வைக்கு

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply