எரிபொருள் பாவனையில் உலக சாதனை Honda | Tamil Serial Today Org

எரிபொருள் பாவனையில் உலக சாதனை Honda

Loading...

எரிபொருள் பாவனையில் உலக சாதனை Hondaஉலகளவில் மக்களின் நன் நம்பிக்கையை வென்ற மோட்டார் வாகன நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் Honda நிறுவனத்தினால், புதிதாக வடிவமைக்கப்பட்ட கார், எரிபொருள் பாவனையில் உலக சாதனை படைத்துள்ளது.

எரிபொருள் தாங்கியில் முற்றாக எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் 1 ஆம் திகதி இதற்கான சோதனை நிகழ்த்தப்பட்ட போது 24 ஐரோப்பிய நாடுகளின் ஊடாக சுமார் 8,287 மைல் தூரம் பயணம் செய்துள்ளது.

அதாவது சராசரியாக ஒரு கலன் எரிபொருளில் 100.31 மைல்கள் தூரம் பயணித்துள்ளது.

இதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இடத்தினை ஜுன் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் வந்தடைந்துள்ளது.

இதனை ஒரு புதிய கின்னஸ் சாதனையாக பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் எரிபொருள் சிக்கனம் கொண்ட இக் கார்கள் எதிர்காலத்தில் சந்தையில் பலத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading...
Rates : 0
VTST BN