எண்ணெய் பசை சருமத்திற்கு மேக்அப் டிப்ஸ்

Loading...

எண்ணெய் பசை சருமத்திற்கு மேக்-அப் டிப்ஸ்சிலருக்கு மேக்-அப் போட்ட பின்னரும், முகத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பது போல் இருக்கும். மேக்-அப்பில் ஆயில் மேக்-அப் என்று ஒன்று உள்ளது. ஆனால் சிலருக்கு ஆயில் மேக்-அப் போடாமல், சாதாரண மேக்-அப் போட்டாலே எண்ணெய் வழியும்.

இவ்வாறு அதிக எண்ணெய் பசையுடன் தெரிவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் மேக்-அப் போடும் முன் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களை செய்யாமல் போடுவது மற்றும் அதிக எண்ணெய் பசை சருமம் இருப்பதும் சில காரணங்கள் ஆகும். மேக்-அப் போடுவதற்கு முன்பு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

• மேக்-அப் போடும் முன் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு கழுவும் போது முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெயானது நீங்கிவிடும். பின் மேக்-அப் போட்டால், எண்ணெய் வழியாமல் இருக்கும்.

• எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், மேக்-அப் போடும் முன், முகத்திற்கு உப்பு அல்லது சர்க்கரையை வைத்து ஒரு சிறு ஸ்கரப் செய்து, பின் மேக்-அப் போட்டால், சருமத் துளைகளில் உள்ள எண்ணெயானது வெளியேறிவிடும்.

• மேக்-அப் செய்த பின் எண்ணெய் வழியாமல் இருப்பதற்கு, ஐஸ் கட்டிகளை வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் மேக்-அப் போட்டால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.

• மேக்-அப் முடியும் போது, ஃபௌண்டேஷன் பவுடரையோ அல்லது கோல்டன் டஸ்ட்டையோ பயன்படுத்தினால், அந்த பவுடரானது முகத்தில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சிவிடும்.

• எப்போதும் டிஸ்யூ பேப்பரை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதனை வைத்து அவ்வப்போது முகத்தை துடைத்தால், முகத்திலிருந்து வெளிவரும் எண்ணெய் மேக்-அப்பை கலைக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply