உலர்ந்த பழங்களில் உள்ள மருத்துவக் குணங்கள்

Loading...

உலர்ந்த பழங்களில் உள்ள மருத்துவக் குணங்கள்அன்றாடம் உட்கொள்ளும் உலர்ந்த பழங்களில் இருக்கின்ற உயரிய மருத்துவ குணங்கள் எவையென நாம் பார்ப்போம்.

* அத்திப்பழம் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.

* உலர்ந்த ப்ளம்ஸை, மல்டி-வைட்டமின் மாத்திரை என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவில் அதில் வைட்டமின்கள் உள்ளது மேலும் இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.

* பெர்ரிப் பழங்களில் ஒன்றான ப்ளூபெர்ரியிலும், உலர்ந்து இருக்கிறது. இந்த உலர் ப்ளூபெர்ரியில் வைட்டமின் சி, பி மற்றும் ஏ அதிக அளவில் நிறைந்துள்ளது. இது மைய நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத சத்துக்கள் உள்ளடக்கியது.

* கோடையில் மட்டும் கிடைக்கும் மாம்பழத்தை வருடம் முழுவதும் சாப்பிடுவதற்கு தான் உலர் மாம்பழங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த உலர் மாம்பழங்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவை உள்ளன. அதுமட்டுமின்றி இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளன.

* ஆப்ரிக்காட் இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதவும் இது டயட்டில் இருப்போருக்கு மிகவும் சிறந்த ஸ்நாக்ஸ்.

* உலர்ந்த செர்ரி பழத்திலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இது டெசர்ட் உணவுகளில் டாப்பிங்கிற்கு ஏற்றதும் கூட.

* கிரான்பெர்ரியில் (Cranberry) நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். அதேப் போன்று உலர்ந்த கிரான்பெர்ரியை அதிகம் சாப்பிட்டாலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிலும் சிறுநீர் தொற்று அல்லது இருமல் மற்றும் சளி இருப்பவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply