உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் கேமரா

Loading...

உலகின் மிகப் பெரிய, ‘டிஜிட்டல்’ கேமராஉலகின் மிகப் பெரிய, ‘டிஜிட்டல்’ கேமரா உருவாகி வருகிறது. இந்த கேமரா முழு உருவம் பெற்றதும் விண்வெளியை ஆராய உதவும் பெரிய தொலைநோக்கியுடன் பொருத்தப்படும்.
அமெரிக்க எரிசக்தி துறையின் உத்தரவுப்படி தயாராகி வரும் இந்த கேமராவின் துல்லியமும் மிக அதிகம். 3.2 ஜிகா பிக்செல்! இதன் மூலம் சந்திரனைவிட, 40 மடங்கு அதிகமான பரப்பளவை படம் பிடிக்க முடியும். தற்போது விண்வெளி ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் வேறு எந்த தொலைநோக்கியையும்விட அதிகமான அளவுக்கு ஒளியை உள்வாங்கி பதிவு செய்யும் திறன் இந்த புதிய கேமராவுக்கு இருக்கும் என்று இதை உருவாக்கிவரும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று டன் எடையும், ஒரு சிறிய கார் அளவுக்கு நீள- அகலமும் கொண்டஇந்த கேமராவின் அசத்தலான இன்னொரு அம்சம், இதில் இருக்கும் மூன்று வண்ண வடிகட்டிகள். இந்த வடிகட்டி களை மாற்றி, மாற்றி பயன்படுத்துவதன் மூலம் விண்ணில் அகச்சிவப்புக் கதிர்கள் முதல் புற ஊதாக் கதிர்கள் வரையிலான ஒளி அலைவரிசைகளை படம் பிடிக்கலாம்.
பிரபஞ்சம் உருவான விதத்தை ஆராய்வது முதல் விண்கற்களை படம்பிடிப்பது வரை, பலவித விண்வெளி ஆய்வுகளுக்கு இந்த மெகா டிஜிட்டல் கேமரா பயன்படும். இந்த டிஜிட்டல் கேமராவுக்குள் பொருத்தப்படவுள்ள பெரிய கண்ணாடியை கடைந்து உருவாக்குவதற்கு மட்டும் ஆறு ஆண்டுகள் பிடித்துஇருக்கிறது. இது தவிர, கேமராவின் லென்ஸ்கள் உள்ளிட்ட பல உதிரி பாகங்களை தயாரிப்பதற்கான ஒப்பந்த வேலைகள் வெளியாருக்கு தரப்பட்டிருக்கிறது.
இந்த மெகா கேமராவை கட்டமைக்கும் வேலைகளில் பெரும்பாலும் அமெரிக்காவில் எரிசக்தி துறை உள்ளிட்ட மூன்று ஆய்வகங்களில் நடக்கும். எல்லா வேலைகளும் முடிந்ததும் சிலி நாட்டில் ஒரு இடம் முடிவு செய்யப்பட்டு அங்கே தொலைநோக்கியுடன், டிஜிட்டல் கேமராவை விஞ்ஞானிகள் 2022ல் நிறுவுவர்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply