உருளைக்கிழங்கின் மகத்துவங்கள்

Loading...

உருளைக்கிழங்கின் மகத்துவங்கள்மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றில் உணவிற்கு என்றுமே முதல் இடம் உண்டு.

உணவுகளை பல வகைகளில், பல விதங்களில், பல பெயர்களில் நாம் தயாரிக்கிறோம். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உருளைக்கிழங்கு மலைப்பகுதிகளில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு உற்பத்தியில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. உலக மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவு வகைகளுள் உருளைக்கிழங்கும் ஒன்று. உருளைக்கிழங்கை பயன்படுத்தி மொறுமொறுப்பான சிற்றுண்டி உணவு வகைகள் பல தயாரிக்கப்படுவதே இதற்கு காரணமாகும்.

உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் சி, பி மற்றும் ஏ வைட்டமின்கள், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், புரதம் மற்றும் நார்ச்சத்து முதலிய உயிர்ச்சத்துகளும் உருளைக்கிழங்கில் உள்ளன. எண்ணற்ற நன்மைகளையும் தன்னகத்தே ஒருங்கே கொண்டுள்ள உருளைக்கிழங்கின் ஆரோக்கிய குண நலன்களை அறிந்துள்ள மக்கள் குறைவே. ஆகவே தான் உருளைகிழங்கின் ஆரோக்கிய நலன்களை தொகுத்து உள்ளோம். நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

* வயிற்று உபாதைகளால் பாதிக்கப்பட்டவர் உருளைக்கிழங்கு சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

* உருளைக்கிழங்கு சாறு குடிக்கும் போது சில நேரங்களில் வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

* புதிய, புள்ளிகளற்ற, முதிர்ந்த, முளை விடுத்துள்ள உருளைக்கிழங்கினை பயன்படுத்தி சாறு தயாரிக்கும் போது அதன் சுவை அதிகம்.

* உருளைக்கிழங்கு சாற்றின் சுவையை கூட்ட, அதனுடன் சிறிதளவு கேரட் சாற்றினையும், சேஜ் (sage), நெட்டில் (nettle) மற்றும் ஸ்பைருலீனா (spirulina) முதலிய மூலிகைகளையும் சேர்க்கலாம்.

உருளைக்கிழங்கு சாறு அருந்துவதால் இதய நோய் ஏற்படும் வாய்ப்புகளை தடுக்க மற்றும் குறைக்க முடியும் என்று நம்பப்படுகிறது. மேலும் இது இரத்த நாளங்களில் அடைப்பு, மாரடைப்பு, புற்றுநோய் கட்டிகளை குணமாக்குவதாக மக்கள் நம்புகின்றனர். எனவே இது சிறந்த சமையலறை தேர்வு ஆகும்.

தினமும் காலை உணவிற்கு முன் மற்றும் இரவு உணவிற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பாக உருளைக்கிழங்கு சாற்றினை அருந்துவதால், பசி கட்டுப்படுத்தப்படுகிறது. பசி கட்டுப்படுவதால் எடை குறைகிறது.

சிறுநீரக பாதிப்பினை சரிசெய்ய உருளைக்கிழங்கு சாறு சிறந்ததாக கருதப்படுகிறது. மேலும் இது சிறுநீரக பாதையில் கால்சியம் கற்கள் உருவாவதை தடுக்கிறது.

கல்லீரல் மற்றும் பித்தப்பையில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி, ஒரு கழிவு நீக்க முகவராக செயல்படுகிறது. மேலும் கல்லீரல் வீக்கத்தினை சரிசெய்யும் சிகிச்சைக்கு ஜப்பானியர்கள் உருளைக்கிழங்கு சாற்றினைப் பயன்படுத்துகின்றனர்.

கேன்ஸர்கேஸ்டிரிக் அல்ஸர் (cancergastric ulcer-seithycom), நீரிழிவு நோய், சிறுநீரக நோய்கள், இதய நோய், கல்லீரல் நோய், உயர் இரத்த அழுத்தம், கடுமையான தோள் வலி ஆகிய நோய்கள் குணமாக வேண்டுமானால், தினமும் 1 அல்லது 2 கப் உருளைக்கிழங்கு சாறு அருந்துங்கள்.

தலைமுடியின் வளர்ச்சியை மேம்படுத்த உருளைக்கிழங்கு சாறு உதவுகிறது. செய்தி.காம் – அதற்கு உருளைக்கிழங்கின் தோலினை நீக்கி துண்டுகளாக்கி அரைத்து, பின் அதனை பிழிந்து வடிகட்டும் போது கிடைக்கபெறும் சாற்றுடன் சிறிதளவு தேன் மற்றும முட்டையின் வெள்ளைக்கருவினை சேர்த்து கலந்து, நமது தலையின் மேல் பாகத்தில் தடவி 2 மணிநேரம் கழித்து, மென்மையான ஷாம்புவின் உதவியால் அலசும் போது, நாளடைவில் நமது தலைமுடியின் வளர்ச்சி மேம்படும். ஆகவே அழகை அதிகரித்து, உடல்நலத்தைப் பேணும் உருளைக்கிழங்கின் பெருமையை உணர்ந்து அன்றாட வாழ்வில் உருளைக்கிழங்கினை பயன்படுத்தினால், நமது உடல் நலம் மேம்படும் என்பதில் ஐயமில்லை.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply